திருத்தப்படும் ரியல் எஸ்டேட் துறை 2006, 2008 ஆண்டுகளில் தமிழகத்தில் ரியல் எஸ்டேட் அபார வளர்ச்சியில் இருந்தது எங்கு பார்த்தாலும் சைக்கிள் பஞ்சர் ஒட்டுபவர் முதல் இளநீர் கடைகாரர் வரை ரியல் எஸ்டேட் செய்து கொண்டு இருந்த நிலைமை அப்போது இருந்தது , தமிழகம் முழுவதும் உள்ள எல்லா மாவட்டங்களிலும் எல்லா பகுதிகளிலும் ஐ . டி பார்க் , சிப்காட் , சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பல வித அறிவிப்புகள் வெளியாகி இருந்தன அவையெல்லாம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அதிகப்படியான வீடுகள் மற்றும் வீட்டுமனை தேவைகள் இருக்கும் என்பதன் அடிப்படையில் பல பெரிய , சிறிய , பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் களம் அமைத்து எல்லா பக்கங்களிலும் வேகமாக செயல்பட்டு வந்தனர் அதனால் எங்கு பார்த்தாலும் ரியல் எஸ்டேட் போர்டு விளம்பரங்கள் , ஆன்லைன் விளம்பரங்கள் , டி . வி , ரேடியோ விளம்பரங்கள் என எங்கு பார்த்தாலும் ரியல் எஸ்டேட் மயமாகவே காட்சியளித்த காலம் உண்டு அடிப்படை உள்கட்ட அமைப்பு தமிழகத்தில் இல்லாமல் அதாவது நல்ல சாலைகள் , குடிநீர் , மின்சாரம் போன...
Posts
Showing posts from November 10, 2016