. நடைமுறையில் இல்லாத ஆனால் இப்பொழுதும் தேவைபடுகிற யுடிஆருக்கு முந்நைய 6 ஆவணங்கள்

நடைமுறையில் இல்லாத ஆனால் இப்பொழுதும் தேவைபடுகிற யுடிஆருக்கு முந்நைய 6 ஆவணங்கள் 1)S.L.R எஸ் .எல்.ஆர் ஆவணம் செட்டில் மெண்டு லேண்டு ரிக்கார்டு என்பதன் சுருக்க சொல் தான் SLR ஆகும். வருவாய்துறையில் 1920 க்கு முன் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் செட்டில்மெண்டு சர்வே முடிந்த பிறகு உருவாக்கபட்ட நில உரிமையாளர் பெயர் பட்டியல் நிலத்தின் வகை மண்வயணம் விதிக்கபட்ட வரி அதன் பரப்பு உட்பட அனைத்து விவரங்களும் அதில் இருக்கும். அதன் பரப்பின் அலகுகள் பிரிட்டிஷ் இம்பாரியல் சிஸ்டம் என்பதால் ஏக்கர் செண்டு கணக்குகளில் பரப்பு இருக்கும். இது தமிழகத்தில் 1920 என்று ஒரே ஆண்டில் உருவாக்கபட்ட கணக்கு அல்ல!! சில ஊரில் 1913, சில ஊரில் 1905, சில ஊரில் 1911 என்று வேறு வேறு ஆண்டுகளில் செட்டில்மெண்டு ரிக்கார்டு உருவாக்கபட்டு இருக்கும். ஒரே ஆண்டில் தமிழ்நாட்டை முழுவதும் செட்டில்மெண்டு சர்வே செய்து பெயர் பட்டியல் தயாரிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளலாம். இதனை பைசலாதி ரிஜிஸ்டர் என்றும் சொல்லுவார்கள். 2) RSLR ரீ செட்டில்மெண்டு லேண்ட் ரிக்கார்டு: எஸ்.எல்.ஆரில் நில உரிமை முறையில் ஜமீன் இனாம் நில...