முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 25-வது பாகம்) அப்படி நிர்ணயிக்கும்பொழுது தமிழகம் முழுவதும் அதுவரை இருந்த உயர் மதிப்புகளை விட பன்மடங்கு அதிகரித்து விட்டார்கள். இப்பொழுது சமூக ஊடகங்கள் அதிக அளவில் இருக்கிறது அப்பொழுது அப்படி இல்லை. பொது மக்கள் கருத்து கேட்டு அப்போது அவசர அவசரமாக நடந்தது. பதிவுத்துறை பொறுத்த வரை யாராலும் ஓன்று செய்ய முடியாது என்ற எண்ணத்தில் சதுரடி 10 ரூபாய் இருந்த இடங்களை எல்லாம் 50 மடங்கு 100 மடங்கு உயர்த்தி விட்டார்கள். இப்படி பட்ட சொத்திற்கும் அங்கு நிலவும் சந்தை மதிப்பிற்கும் சம்மந்தமில்லாமல் நிறைய MVG உருவானதால் மக்கள் கோபமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள். எப்பொழுதும் சட்டத்திற்கு விரோதமாக இருக்கும் நிர்வாக உத்தரவுகளை நீதி மன்றத்தில் உடைத்து விடலாம் சட்டத்திற்கு உட்பட்டு மக்கள் விரோதமாக செயல்படுத்தப்பட்ட நிர்வாக உத்தரவுகளை மக்கள் மன்றத்தில் உடைத்து விடலாம் அது போல 2016 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அன்று ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அம்மையார் அவர்கள் படுதோல்வி அடைந்தார்....