மோசடி பத்திரங்களை தடுக்க வருவாய் பதிவுத்துறை தவறான பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை கொடுக்க வேண்டும்.

ஆரம்ப காலகட்டங்களில் ஆங்கிலோ - இந்திய பதிவு சட்டத்தில் கீழ் நடந்த அனைத்து கிரயபத்திரங்களும் மற்றும் பிற பத்திரங்களும் அந்தந்த சட்ட எல்லைக்குள்ள நீதிமன்றத்தின் திவான் இ அதாலத் ( தற்போது பதிவாளர் ) கீழ்தான் நடந்தது . அதன் பிறகு அதிக வேலை பளு சீரன பதிவு நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்திலிருந்து அதனைப் பிரித்து பதிவுத்துறை என்று தனியாக ஒரு துறை உருவாக்கி அதில் பதிவு நடவடிக்கைகள் எல்லாம் செய்யபட்டது பதிவு செய்யும் நடவடிக்கைகள் மட்டும்தான் செய்யவேண்டும் . பதிவிற்கு வரும் ஆவணங்களில் எழுதி கொடுப்பவருக்கு நில உரிமை இருக்கிறதா என்று ஆய்வெல்லாம் செய்ய சார்பதிவாளருக்கு உரிமை இல்லை மற்றும் மோசடியாக பத்திரங்கள் செய்து விட்டால் அதனை இரத்து செய்கின்ற அதிகாரம் பதிவுதுறைக்கு கிடையாது என்ற இந்த இரண்டு கட்டபாடுகளை விதித்து பதிவு துறையை பதிவு வேலைகளை மட்டும் செய்யும் இயங்குதல் நடவடிக்கை மட்டுமே செய்ய வேண்டும் தீர்மானிக்கின்ற உரிமை எல்லாம் நீதிமன்றமே வைத்து இருந்தது அதற்கு காரணமு...