வழக்கறிஞர் காதலிக்கு சர்வே பற்றி ஒரு ரியல்எஸ்டேட் ஏஜென்டின் கடிதம் !!!

கடிதம் 1 (காதலிக்கு நில அளவை சர்வே பற்றி கடிதம் மூலம் ஒரு ரியல்எஸ்டேட் ஏஜெண்டின் ஒரு பாடம்) என் அன்பு பெத்தவளே! வணக்கங்களும் வாழ்த்துக்களும், உன்னுடைய கோர்ட் வேலை,வழக்குகள்,விடுதி வாழ்க்கை , உன் நட்பு வட்டம் அனைத்தையும் கான்சியசாக தேர்வு செய்து வாழ்க்கையை பயணிப்பாய் என்று நம்புகிறேன். இங்கு நான் வழக்கம் போல் இரு சக்கர வாகனத்தில் தமிழகம் முழுவதும் சுற்றி கொண்டிருக்கிறேன். என்னுடைய MISSION காக அனுதினமும் உழைத்து கொண்டிருக்கிறேன். தினமும் காலையில் மட்டும் அதிகபடியாக முதுகு வலி இருக்கிறது. அந்த நேரத்தில் உன்னுடைய படங்களும் , உன்னுடைய கண்களும் எனக்கு மருந்தாய் இருக்கின்றன. கடந்த முறை நாம் இருவரும் லாங் ட்ரைவ் ECR இல் பைக்கில் சென்ற போது நீ சொல்லி இருந்த இந்த நில வழக்குகளில் சர்வே பற்றிய செய்திகளும் அதன் உள்ள நுட்பங்கள் பற்றிய குறைவான அறிதலும் அதில் இருக்கின்ற கஷ்டங்களும் நீ மண்டையை போட்டு குழப்பி கொண்டு இருக்கின்றாய் என்று சொன்னதும் மேலும் நீ வழக்கறிஞராக இருந்து கொண்டு நிலதாவாக்களில் சர்வே விஷயங்கள் பாடம் சவாலாக இருப்பதாக நீ பீல் செய்வதும் எனக்கு கொஞ்சம் கஷ்டம...