Posts
Showing posts from December 27, 2021
பாண்டிசேரி நிலத்தின் நலமறிய ஆவல்-5 சிறப்பாக நடந்தது!
- Get link
- X
- Other Apps
பாண்டிசேரி நிலத்தின் நலமறிய ஆவல்-5 சிறப்பாக நடந்தது! 25.12.2021 அன்று கிறிஸ்துமஸ் நாளில் பாண்டிசேரியில் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளையின் நிலத்தின் நலமறிய ஆவல் என்ற நிலசிக்கலுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதற்கு அறகட்டளை குழுவினர்களும் சமூக ஊடக நண்பர்களும் அன்பான ஒத்துழைப்பை தொடர்ந்து கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த முறை பொறியாளரும் குளோபல் பிராபர்ட்டி சர்வே நிறுவனத்தின் உரிமையாளரும் திரு.C.சந்தோஷ் குமார் அவர்களை சர்வே சம்மந்தமான expert talk ற்காக அழைத்து இருந்தோம் இந்த முறை அரங்கம் நமது பாண்டிசேரி அலுவலகத்திலேயே உருவாக்கியிருந்தோம்!அதனால் அரங்க வாடகை கையை கடிக்கும் என்று நிலை இல்லை காலை ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள் சேலம் பெங்களூர் கோவை திருவண்ணாமலை மரக்காணம் ஆகிய பகுதிகளில் இருந்து நண்பர்கள் வந்து இருந்தார்கள். வந்தவர்கள் நிலசிக்கல்கள் ஆவணபடுத்தபட்டு அதற்கேற்ற வழிமுறைகள் எழுத்துமூலமாக கொடுக்கப்பட்டது! மேடை மரியாதை நிகழ்ச்சியில் வரவேற்புரை சோளிங்கர் மோகன் அவர்கள் ஆற்றினார். அதனை அடுத்து நிலம் உங்கள் எதிர்காலம் அறகட்டளை செய...