முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 14-வது பாகம்) உதாரணமாக 31.07.2011ஆம் ஆண்டு 39812 பத்திரங்கள் நிலுவை, அதற்கு மதிப்பு நிர்ணயிக்கப்படாமல் 924 கோடி ரூபாய் முடங்கி இருந்தது, அதில் 125 கோடி “CASH FLOW” எடுக்க வேண்டும் என்று லட்சியம் வைத்து, தொலைகாட்சி, உள்ளூர் செய்தி தாள்கள், நேரில் சென்று வீட்டு வீடாக பிரச்சாரம் என்று பதிவுதுறை 39 கோடி வரை வசூல் செய்தார்கள், இப்படி சமாதன திட்டம் வைத்து நஷ்டத்தில் வசூல் செய்வதற்கு பதிலாக முரண்பாடு இல்லாத MVG யை மெனக்கெட்டு நிர்ணயித்தால் பதிவு துறையும் சிறப்பாக இருக்கும் அரசும் நலத்திட்டங்களை செயலாற்றுவதற்கு வசதியாக இருக்கும். அதற்கு அடுத்ததாக 47(A) யின் கீழ் வரும் பத்திரங்களை சட்ட விரோத ஆதாயம் பெற்று கொண்டு பத்திரம் பதிந்த சம்சாரிகளுக்கு சாதகமாக பத்திரங்களை விடுவிக்க இறுதியானை பிறப்பிக்கிறார்கள் என்று ஒரு வதந்தி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது அது உண்மையாக இருந்தால் பதிவு துறைக்கு வருவாய் கசிவு நிச்சயம் அதே போல் 47A(3) யின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய பத்திரங்கள் கால வரையறை ...