காலாவதியாகிப் போன நகல் எழுத்தர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

கணினி பயன்பாடும் கம்ப்யூட்டரின் வேகமும் இணையதளத்தின் வளர்ச்சியும் இன்று அசுர வேகத்தில் வந்துவிட்டதால் ஒழிக்கபட்ட வேலைவாய்ப்புகளில் ஒன்றுதான் இந்த நகல் எழுத்தர் பணி. பத்திர அலுவலகத்திற்கு வெளியே ஆவண எழுத்தருக்கு பக்கத்தில் நகல் எழுத்தரும் அமர்ந்திருப்பதை பழைய ரியல் எஸ்டேட் ஏஎஜண்டுகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்த்து இருப்பார்கள். அந்தகாலத்தில் கிரைய பத்திரங்களை முத்து முத்தான அழகான கையெழுத்துகளில் கிரைய சரத்துக்களை ஆவண எழுத்தர்களை போலவே இவர்களும் எழுதுவார்கள். ஆனால் இவர்களுக்கு ஆவண எழுத்தருக்கான சட்டநுணுக்க தகுதிகள் அவ்வளவு தேவைபடாது. நகல் எழுத்துகளுக்கும் ஆவண எழுத்துக்களைப் போலவே தேர்வுகள் எல்லாம் நடத்தி நகல் எழுத்தர் லைசென்சு கொடுப்பார்கள்.எல்லாம் சரி நகல் எழுத்தருக்கு என்னதான் பணி என்றால் கணினி பயன்பாடு இல்லாததற்கு முன்பு கிரைய பத்திரம் ஆவண எழுத்தர் மூலம் முத்திரை தாளில் டைப் செய்து அல்லது எழுதி விடுவார்கள் அந்த கிரயபத்திரத்தின் இன்னொரு பிரதி சார்பதிவக ஆவணத்தில் filing Copy ஆக பாதுகாத்து வைப்பதற்கு அதனை அப்படியே ஒரு நகல் பார்த்து எழுதி அதனை சார்பதிவகத்தல் வைப...