செட்டில்மெண்டு ஆவணங்கள், கதாஸ்ட்ரல் ஆவணங்கள், யுடிஆர் ஆவணங்களிடையே உள்ள 28 வேறுபாடுகள் என்னென்ன?

1) தமழ்நாட்டின் நில வருவாய் ஆவணங்களை பொறுத்தவரை அதனை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம் அ)செட்டில்மெண்ட் கால ஆவணங்கள் ஆ)நில உடைமை மேம்பாட்டு திட்ட கால ஆவணங்கள் 2) பாண்டிசேரியை பொறுத்தவரை நில வருவாய் ஆவணங்களை இரண்டாக பிரிக்கலாம் அ)கதாஸ்ட்ரல் ஆவணங்கள் ஆ) நில உடைமை மேம்பாட்டு திட்ட ஆவணங்கள் ஆகும் 3) தற்பொழுது நாம் தமிழ்நாடு பாண்டிசேரியில் பயன்படுத்தி கொண்டு இருக்கும் பட்டா சிட்டா அ-பதிவேடு புலப்படம் என அனைத்தும் நில உடைமை மேம்பாட்டு திட்ட ஆவணங்கள் அதாவது யுடிஆர் ஆவணங்கள் ஆகும் 4) ஒரு நிலம் வாங்கும் போது இப்பொழுதெல்லாம் யுடிஆர் ஆவணங்கள் மட்டும் பார்த்தால் போதாது. 5) பட்டா சரியா இருக்கு அ-பதிவேடு சரியா இருந்தது என்று சொத்து வாங்கினா திடீர் என்று அது கோவில் சொத்து, இது அறநிலைய சொத்து, இது பஞ்சமநிலம், நில உச்சவரம்பு, பூமிதானநில சிக்கல் மற்றும் இதுல குடிவார உரிமை, குத்தகை உரிமை எங்களுக்கு இருக்கிறது என்ற புது புது பிரச்சினைகள் எல்லாம் வர ஆரம்பித்துவிடும். 6) அதனால் தமிழ் நாட்டில் செட்டில்மெண்டு ஆவணங்களையும் பாண்டிசேரியில் கதாஸ்ட்ரல் ஆவணங்களையும் ஆழமாக பார்த்தபிறகு சொத்து...