நீங்கள் வாங்க போகும் சொத்து நீதிமன்றத்தில் வழக்கில் இருப்பதை எப்படி தெரிந்துகொள்வது!!

1)ஒரு சொத்து நீதிமன்ற வழக்கில் இருப்பதை தெரியாமல் வாங்குவோர் பலர் இருக்கிறாரகள்.வாங்கி முடித்துவிட்டு கோர்ட்டுக்கும் வக்கீல் ஆபிஸுக்கும் அலைந்து சம்பாதித்த பணத்தை வீணாக்கி கொண்டு இருப்பதை பாரத்து இருக்கிறேன். 2) சொத்தை வாங்குவதற்கு முன்கூட்டியே நீதிமன்ற வழக்குகள் இருக்கிறதா என்று முன்கூட்டியே கொஞ்சம் அலசி ஆராய்நதால் எதிர்கால சிக்கல்களை வராமல் தவிர்க்கலாம். 3) நிறைய சொத்துக்கள் அண்ணன் தம்பி பிரச்சினை அக்காவுக்கு தங்கைக்கு பங்கு கொடுக்கவில்லை என்று பாகபிரிவினை வழக்குகள் நடக்கும் பெரும்பாலும் இவை பூர்வீக அல்லது தந்நை வழி தாய் வழி சொத்தானால் வாரிசுரிமை சொத்தாக இருக்கும். 4)அப்படி இருக்கும்படசத்தில் விற்பவரிடம்(seller) நீங்கள் முதல் கட்ட சந்திப்பிலேயே வாயை திறந்து கேட்டுவிடவேண்டும்.சகோதர சகோதரிகள் வழக்கு ஏதாவது போட்டு இருக்கிறார்களா? என்று அதற்கு விற்பவர் வழக்கு உண்டு இல்லை என்று நேரடியாகவும் சொல்லுவார்.அல்லது பதிலில் கொஞ்சம் பிசிரடிக்கும் அதனை வைத்தே ஒரளவு நாம் புரிந்து கொள்ள முடியும். 5)சில இடங்களில் விற்பவர் காரியகாரராக இருப்பதை உணர்ந்தால் விற்பவரின் துணைவியாரி...