எதற்காக ஜாமீன் கடன் பத்திரம் (Deed of Indematy ) போடப்படுகிறது?

1.ஒரு சொத்தை வாங்கும்போது அதன் கிரயப்பத்திரத்தை நாம் எழுதுகிறோம். அந்தக் கிரயப்பத்திரம் உண்மையில் ஒப்பந்தச் சட்டம் சொத்து பரிமாற்றச் சட்டம் வாரிசு உரிமைசட்டம், உயில் சட்டம் போன்ற பல சட்டங்களை இணைத்து எழுதப்படுகின்ற ஷரத்துகள் எல்லாம் கிரயப்பத்திரத்தில் உள்ளது. 2.ஜாமின் கடன் பத்திரம் என்பதும் ஒரு கிரயப் பத்திரத்தில் இறுதியாக நாம் எழுதுகிறோம். என்னவென்றால் இந்த சொத்தில் எதிர்காலத்தில் ஏதாவது வில்லகங்கள் வந்தால் நானே முன்னின்று தீர்த்துவைக்கிறேன் என்ற உறுதி மொழியை சொத்தை விற்பவர் கொடுக்கின்றார். அதுதான் ஜாமீன் கொடுக்கும் முறை இந்த ஜாமின் கொடுக்கும் முறையை நாம் பொதுவாக கிரயப்பத்திற்குள்ளேயே எழுதிவிடுகிறோம். 3.இருந்தாலும் நீங்கள் வாங்கப்போகின்ற சொத்தில் ஆவணங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. தீவிபத்தில் கருகிவிட்டது உண்மையிலேயே தொலைந்துவிட்டது என்று சொன்னால் அவர் உண்மையைத்தான் சொல்கிறார் நம்பும் பட்சத்தில் மேற்படி சொத்தை நீங்கள் கிரயம் வாங்குகிறீர்கள் ஒரு அச்சம் வருகிறது. 4.அப்படி நீங்கள் நம்பி வாங்கினாலும் உங்களுக்கு ஒரு சட்ட பாதுகாப்பு, சட்ட அந்தஸ்த்து உள்ள ஆ...