சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 2
சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 2 ....அல்லது பேனாவினால் ஒரு மதிப்பை எழுதி அதன் அருகில் பதிவுத்துறை துணைதலைவர் கையெழுத்து இருக்கும்! இப்படி பென்சிலில் எழுதிய குறிப்பையும் அல்லது DIG உத்தரவுடன் இருக்கும் குறிப்பையும் சார்பதிவாளர் பார்த்து வழிகாட்டி மதிப்பு என்னவென்று சொல்வார்கள்.இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் MVG பதிவேட்டில் “மதிப்பு “ சதுரடி 1000 என்று இருந்தால் அதன் பக்கத்தில் பேனாவில் பதிவுத்துறை தலைவர் உத்தரவின் பேரில் 3000 சதுரடி என்று எழுதி இருந்தாலே 3000 மதிப்பைதான் சார்பதிவாளர் குறித்து கொடுக்க வேண்டும். அதேபோல் எந்தவித உத்தரவு இல்லாமல் பென்சிலில் 2000 சதுரடி என்று எழுதியிருந்தால் அதனை குறிக்காமல் உண்மையாக அச்சடிக்கப்பட்ட மதிப்பு ரூபாய் 1000த்தைத்தான் சார்பதிவாளர் குறித்து கொடுக்க வேண்டும்!என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்! தமிழகத்தில் சாமானியன் யாராவது பத்திரம் பதியபோனால் அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய் மதிப்பை சார்பதிவாளர் சொல்லாமல் பக்கத்தில் பென்சிலில் எழு...