மறந்து விட்ட தளவாய்அரிய நாயக முதலியார் வரலாறு!!!

மறந்து விட்ட தளவாய்அரிய நாயக முதலியார் வரலாறு!!! மதுரைக்கு களபணி சென்று இருந்த பொழுது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நானும் நண்பர் அடோன் அவர்களும் சென்றோம். ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொரான விளைவால் பார்வைக்கு அனுமதி மறுத்து விட்டனர். அந்த ஆயிரங்கால் மண்டபத்தை கட்டியது தளவாய் அரிய நாயக முதலியார் அவர்கள் தான் அவரின் சிலை ஒன்று குதிரை மீதேறி தாடி வைத்தவாறு நின்று இருப்பார் . அந்த சிலை அரியநாயக முதலியார் உடையது என்று பழைய நூல்களில் படித்து இருக்கிறேன். அவர் சிலை கீழ் போட்டோ எடுக்கலாம் என்றால் போன் எல்லாம் பிடுங்கி விட்டு தான் அனுப்புகிறார்கள். கிருஷண தேவராயரின் ஆட்சியை மதுரையில் பிரசவித்த விசுவநாத நாயக்கருக்கு மிகவும் பக்கபலமாக உறுதுணையாக இருந்தவர் அதன் பிறகு விசுவநாத நாயக்கர் மகன் கிருஷ்ணப்பாவிற்கு இராஜ குருவாக வழி நடத்தியவர் தான் இந்த தமிழ் முதலியார். பாமினி சுல்தான்களால் கிருஷண தேவராயர் வீழ்ச்சி விஜயநகர போரில் வீழ்ச்சி அடைந்தார்கள் அந்த போரிலும் அரிய நாயக முதலியார் கலந்து கொண்டு சுல்தான்களிடம் தோல்வி அடைந்தாலும் விஜய நகர பேரரசை பெனுகொண்டா சின்னப்பராயர் சீரங்கபட்டினத்திற்கு திருமலைராயர் ...