விலை நிலத்தை மனை மதிப்பில் சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயித்து இருந்தால் அதனை எப்படி சரி செய்வது? -பாகம்-2
விலை நிலத்தை மனை மதிப்பில் சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயித்து இருந்தால் அதனை எப்படி சரி செய்வது? -பாகம்-2 அதன்பிறகு சாமானியன் கிரய பத்திரம் தயாரித்து அதனுடன் உட்பிரிவு அறிக்கை சாகுபடி அடங்கல் வைத்து ஒரு கடிதம் சார்பதிவாளருக்கு அய்யா என்னுடைய நிலம் சந்தை மதிப்பு வழிகாட்டி மனை மதிப்பாக இருக்கிறது. ஆனால் உண்மையில் எனது நிலம் விளை நிலம் ஆகும். அதற்கான உட்பிரிவு அறிக்கையும், சாகுபடி அடங்கலும் வைத்துள்ளேன். மேலும் மாநில பதிவுத்துறை தலைவர் ந.க.எண் 20458/எல்1/2013 நாள் 27-04-2013 என்ற சுற்றறிக்கையும் இதுபோன்ற நேர்வுகளில் அதாவது விளை நிலத்தை மனை மதிப்பாக முரண்பாடாக போட்டுவிட்டார்கள் என்றால் எப்படி நடந்துகொள்ள வேண்டும். என்று சொல்லி இருக்கிறார்கள், அதனையும் இணைத்து சார்பதிவாளர் அவர்களிடம் சமர்பிக்க வேண்டும். இதனை எல்லாம் கொடுத்தவுடன் சார்பதிவாளர் கண்டிப்பாக பதிந்துவிடுவார், அதன்பிறகு பதிவுசெய்யப்பட்ட சாமானியனின் விளை நிலத்தை நேரடியாக வந்து ஆய்வு செய்வார்கள். அதன்பிறகுதான் பத்திரம் திரும்ப அளிக்கப்படும். சில சார்பதிவாளர்கள் கண்டி...