காமராஜரும் நில சீர்திருத்தமும்..!!!
நிலத்தை பங்கிடுவதிலும் நில உரிமைகளை அனைத்து தரப்பு மக்களுக்கு பகிர்வதிலுமான வேலையை தமிழகத்தில் அய்யா கர்மவீரர் காமராஜர் தொடங்கி வைத்தார் என்றும் அதனை கலைஞர் கருணாநிதி அவர்கள் முடித்து வைத்தார் என்றுதான் நாம் சொல்லலாம். காமராஜர் ஆட்சிக்கு வந்த இரண்டாவது மாதத்தில் நிலசீர்திருத்தத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார்.குத்தகைதாரrகளுடைய உரிமைக்கு பாதுகாப்பு வழங்குதல்,நியாயமான குத்தகையை நிர்ணயித்தல் நிலுடைமையின் உச்சவரம்பை நிர்ணயித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்து அதற்கான கமிட்டிகளை அமைத்தார். தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் நிலங்களின் தரநிலையை அறிந்து நில வருமானம் பண்ணை வருமானம் பற்றிய புள்ளிவிவரங்களை தொகுப்பை முதலில் காமராஜர் அவர்கள் ஆட்சியில்தான் திரட்டபட்டது. 1945 ஜமீனதாரி ஒழிப்பு சட்டம் 1945 ல் போட்டு தூங்கி கொண்டு இருந்தது. இவர் வந்தவுடன் வேகமாக அமுல்படுத்தபட்டு ஜமீனதாரிகளுக்கு இழப்பீடு கொடுக்கபட்டு நிலங்கள் கையகபடுத்துதல் தொடங்கியது 1960 களில் தான் அதனை ரயத்துவாரி பட்டாவாக மாற்றி 10936 சதுர மைல்கள் உழவர்களுக்கும் தொழிலாளர்களுக்க...