சொத்து பதிவுகளில் உள்ள விதிவிலக்குகளும் பதிவு செய்யவில்லை என்றாலும் மாறும் உரிமை மாற்றங்களும்!! தெரிந்துகொள்ள வேண்டிய 25 செய்திகள்!!

1) நம் பதிவு சட்டத்தில் சொத்துக்கள் கைமாறும் பொழுதோ அல்லது சொத்து சம்பந்தமாக வேறு ஏதாவது பரிவர்த்தனைகள் நடக்கும் பொழுது கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் .வாங்குபவர் விற்பவர் இருவரும் சார்பதிவாளர் முன்பு தோன்றி பதிவு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று பதிவு சட்டம் சொல்கிறது. 2)அதில் சில நபர்களுக்கு சார்பதிவாளர் அவர்கள் வீடுகளுக்கு சென்று பதிவு நடவடிக்கையில் ஈடுபடலாம்.சில நபர்களுக்கு சார்பதிவகத்தில் நேரடியாக தோன்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. 3) சில சொத்துகளுக்கு பதிவு செய்வதில் இருந்தே விலக்கு அளிக்கபட்டு இருக்கிறது அவற்றை பற்றி எல்லாம் கீழ்வருவைகளில் விரிவாக காண்போம். 4) ஒரு நிலத்தையோ வீட்டையோ அரசாங்கத்திடமும் அரசாங்க சார்ந்த நிறுவனத்திடமும் விலை கொடுத்து வாங்கும் பொழுதும் அல்லது இலவசமாக பெரும்பொழுதும் அல்லது அரசின் தவணை திட்டங்களின் மூலமாக வாங்கும் பொழுது அதனை பயனாளிக்கு எழுதி கொடுப்பதற்கு அரசாங்கத்தின் சார்பாக இருக்கும் அதிகாரிகள் சார் பதிவகத்தில் தோன்றி நேரடியாக பதிவு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என...