சமத்துவத்திற்கு எதிரான கிராமங்கள் ஒழிக்கபட வேண்டியவையே!!

சமத்துவத்திற்கு எதிரான கிராமங்கள் ஒழிக்கபட வேண்டியவையே!! விவசாயம் தான் நாட்டின் வருவாய் என்று இருந்த பொழுது எல்லா கிராமங்கள் மிகவும் முக்கிய பங்காற்றின. ஒவ்வொரு கிராமமும் ஒரு தனி தனி விவசாய உற்பத்தி தொழிற்சாலையாக இயங்கின. அந்த கிராம நொழிற்சாலையில் அந்த அந்த சாதிக்கு ஏற்றவாறு வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு பரம்பரை பரம்பரையாக அடிமைகள் ,வேளாளர்கள்,வியாபாரிகள்,பிராமணர்கள் போன்ற சமுதாய கட்டமைப்புகளை உருவாக்கி நிலையான விவசாய உற்பத்தி நடந்து உள்ளது மேற்படி கிராமங்கள் மற்றும கிராம மக்கள் விளைச்சலில் இருந்து தங்கள் வாழ்கையை பொருளாதார ரீதியாக உயர்த்தி கொண்டனர் அரசு உத்தியோகமோ வங்கி உத்தியோகமோ கிராம மக்கள் அப்பொழு பெருமளவில் கிடையாது. அந்த காலத்தில் அரசிற்கு வேலை பார்த்தால் கூட அதற்கு விவசாய நிலங்கள் ஒதுக்கபட்டு அதில் இருந்து வரும் விளைச்சலைதான் ஊதியமாக வைத்து கொள்ள வேண்டும் உண்மையில் காடு விளைந்தால் தான் எல்லாருக்கும் சம்பளம் வாழ்க்கை ஏன் அரசர்கே வருமானம். அதனால்தான் அனைத்து நிர்வாகமும் கிராமத்தின் மீதே கட்டபட்டு இருந்தது. பீர்க்கா, தாசில், அமுல்தார், பர்கான சௌபா போன்ற அனைத்தும் கிரமங்க...