நிலத்தின் நலம் அறிய ஆவல் என்ற கருத்தரங்கத்தை வெற்றி பெற வைத்ததற்கு அனைத்து உறவுகளுக்கும் நன்றி நன்றி நன்றி!

Writer.Paranjothi Pandian: நிலத்தின் நலம் அறிய ஆவல் என்ற கருத்தரங்கத்தை வெற்றி பெற வைத்ததற்கு அனைத்து உறவுகளுக்கும் நன்றி நன்றி நன்றி! நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் சார்பாக பெற்ற நிலத்தின் நலம் அறிய ஆவல் என்ற கருத்தரங்கத்திற்கு முதலில் தேதி வைத்த பிறகு அனைவரும் கள்ளக்குறிச்சியில் இருக்கின்ற கிராமத்திற்கு வருவார்களா ?மாட்டாங்களா ?என்ற சிறு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது அடுத்ததாக 199 ரூபாய் நுழைவு கட்டணத்தை செலுத்தி நமக்குப் போதுமான 50 நபர்கள் வருவார்களா என்ற குழப்பமும் இருந்தது.மேலும் நிகழ்ச்சிக்கு தேவையான செலவினங்களை ஈடுகட்டுவதற்கு நன்கொடை திரட்டப்பட முடியுமா என்ற சலனமும் இருந்தது! இப்படிப்பட்ட நிலையில் எல்லா மனதடைகளையும் உடைத்து வெற்றிகரமாக நேற்று(14.08.2021)நிகழச்சி முடிந்துள்ளது உண்மையில் கூட்டம்எதிர்பார்த்த 50 நபர்களுக்கு மேலேயே இருந்தது திருச்சியிலிருந்தும் கிருஷ்ணகிரியில் இருந்தும் நாமக்கல்லில் இருந்து கோவையில் இருந்தும் என்று சில மாவட்டங்களை தாண்டி கள்ளக்குறிச்சிக்கு நண்பர்கள் வந்திருந்தார்கள் அதுமட்டுமல்லாமல் பக்கத்து மாவட்டங்களான விழுப்ப...