நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் முன் பதிவு செய்தவர்களுக்கு!!

நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் முன் பதிவு செய்தவர்களுக்கு!! நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பாகம் 1மற்றும் பாகம் 2 இன் முன்பதிவு திட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் பதிந்து பணம் கட்டி இருந்தார்கள்!!அந்த ஆதரவுக்கு முதலில் நன்றி!! டிசம்பர் 7 தேதி புத்தகம் பிரசுரித்து விடுவோம் என்று திட்டமிட்டு இருந்தோம் ஆனால் பிழைதிருத்த வேலையே என்னால் முடிக்காமல் போய்விட்டது. சிவகாசியில் உள்ள அச்சகமும் ஆண்டு இறுதி காலண்டர் வேலை முடித்த பிறகுதான் அச்சு ஏற்ற முடியும் என்று சொல்லிவிட்டார்கள். முன்பதிவு செய்தவர்களுக்கு print on demand இல் உடனடியாக கொடுத்துவிட முடியும் ஆனால் அதனின் அட்டையும் வடிவமும் சிவகாசி அச்சு போல வராது. நான் முழு நேர எழுத்து பணியில் இருந்தால் விரைவில் திருத்தம் செய்து இருப்பேன்.தொழில் முனைவோருக்கான வேலை !களபணி என்று சுற்றி கொண்டே செய்வதால் குறித்த நேரத்தில் வெளியட முடியவில்லை!! புத்தகம் நிச்சயம் தைமகள் பிறக்கும் பொழுது உங்கள் கைகளில் தவழும்!தாமதத்திற்கு மன்னிப்பீராக! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothi_pandian #book #author #land ...