இந்து அறநிலைய துறையும் அதன் அக்கபோரும்!

இந்து அறநிலைய துறையும் அதன் அக்கபோரும்! நிலம் உங்கள் எதிர்காலம் என்று பல ஆண்டுகளாக நான் கூப்பாடு போட்டு வருகிறேன். சமய நிறுவனங்கள் எல்லாம் தங்கள் சொத்துக்களை காப்பாற்ற காலம் காலமாக கல்யாணம் ஆகாத சந்நியாசியை நியமித்து மடம் உருவாக்கி நிலங்களை பாதுகாத்து வருகிறது. நீதி கட்சிக்கு ஆட்சி பிறகு சமய நிறுவனங்களுக்கு அதன் சொத்துகளை நிர்வாகம் செய்ய அற நிலையதுறை உருவாக்கபட்டது. சமீப காலமாக இந்த அற நிலையதுறையினர் பேரில் பல்வேறு குற்ற சாட்டுகள் சொல்லபடுகிறது. கோவில் பூசாரிகள் அறங்காவலரோடு சேர்ந்து இந்து அறநிலையதுறை அதிகாரிகளோடு் சேர்ந்து சிலைகள் பாரம்பரிய தூண்கள் கதவுகள் எல்லாம் களவாடபட்டு வருகிறது என்று ஒரு திருச்சி பக்கம் ஒரு வாத்தியார் சாமி இரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பல வழக்குகள் போட்டு வருகிறார். யானைகளின் வாழ்க்கையிலும் அதன் பாதையிலும் குறுக்கிட்ட ஈஷா நிறுவனத்தின் முதலாளி ஜக்கியும் அற நிலையதுறையை மீட்டு தனி நபர்களிடம் ஓப்படைக்க போராடினார். அவருடன் வலதுசாரி உயர் சாதி இந்துக்களும் கூப்பாடு போட்டார்கள்! அறநிலையதுறை அதிகாரிகள் பலர் பொன்மாணிக்கவேல் அய்யாவால் ஜெயில் பெயில் என்று போய்விட்டு ஜம்...