பதிவு செய்யபடாத உயிலை கையில் வைத்து இருக்கிறீர்களா?

பதிவு செய்யாத ஒரு உயிலை உயில் எழுதியவர் இறந்த உடன் அதனை நடைமுறைக்கு கொண்டு வர பாடாய் பட வேண்டி இருக்கிறது. உயில் எழுதியவர் இறந்த உடன் உயிலை எடுத்து கொண்டு கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து பட்டா மாற்ற சென்றுவிடுவார்கள் . வி ஏ ஒ அதனை பார்த்துவிட்டு உயில் பதிவு செய்யவில்லை இந்த உயில் செல்லாது என்று அவருக்கு தெரிந்ததை சொல்லி உயிலின் பயனாளியை பயமுறுத்தி விட்டுவிடுவார்கள். உயில் எழுதுபவர் உயிரோடு இருக்கும் போதே சார்பதிவகத்தில் தோன்றி எழுதி கொடுக்கிற உயில்தான் சட்ட அந்தஸ்து பெற்றது . பதிவு செய்யாத உயிலை நம்பகதன்மை அற்றது என்று நம்பிக்கை வருவாய்துறை மற்றும் சார்பதிவக அதிகாரிகளிடம் நிலவுகிறது . ஆனால்எனக்கு தெரிந்து பல பதிவு செய்யபட்ட உயில்களே போலியாக தான் இருக்கிறது . மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் உயில் பத்திரத்தில் சொத்து வைத்து இருக்கும் நபரின் கையெழுத்தை வாங்கி விடுகின்றனர் . பிறகு பதிவு அலுவலகத்தில் வேறு ஒரு நபரை வைத்து அவரின் கைரேகை வைத்து பதிந...