Posts

Showing posts from August 4, 2024

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!  (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 20-வது பாகம்) இதுபோன்ற நேர்வுகளில் சம்பந்தப்பட்ட பொது மக்களின் பத்திரம் உடனடியாக திரும்ப பெற வாய்ப்பிலாமல் தாமதம் ஏற்படுகிறது. இப்படி அடிக்கடி பொதுமக்களுக்கும் அரசுக்கும் சந்தை மதிப்பு அதிகம், குறைவு என முரண்பாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்ததால் அரசாணை 589/வருவாய்/23.02.1971 யின் படி நேர்மையான முறையில் தமிழ்நாடு முழுவதும் “ Guide Line “ Value  (வழிகாட்டி மதிப்பு) என்ற சொல்லாடல் நுழைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வழிகாட்டி பதிவேடு உருவாக்கும் பணி முடிக்கப்பட்டது. அதன் பிறகு தகுந்த கால இடைவெளிகளில் பதிவுத்துறை தனியார் வழிகாட்டி மதிப்பை மறுப்பார்வை ( Review ) செய்ய வேண்டும் என்று முதல் ரிவிசன் 1971இல் ஆரம்பிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைபடுத்தி தமிழ்நாடு முழுவதும் 01.09.1981 தேதி ( 132 CT & RE 12.02.1980 ) நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகு அடுத்த 5 ஆண்டு இடைவெளியில் G.O.M.S 161 CTERE ) 13.02.1986 யில் ரிவிசன் செய்யப்பட்டு அடுத்து 3வது ரிவியூ 2வது ஆண்டுகளுக்கு இடைவெளியில் 387 CT