Posts

Showing posts from August 6, 2024

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
 முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!  (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 22-வது பாகம்) இதில் மைய மதிப்பீட்டுக் குழு பதிவுத்துறை தலைவர் தலைமையிலும் வருவாய்த்துறை, பதிவுத்துறை, உள்ளாட்சி அமைப்புகளை வைத்து மாவட்ட குழு, வட்டாரக்குழு எல்லாம் போட்டு வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்தார்கள். 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் எல்லாம் வழிகாட்டி மதிப்பு என்பது கிராமங்களில் சர்வே எண் வாரியாகவும் நகரங்களில் தெரு வாரியாகவும் தரம் பிரித்து வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்து இருந்தார்கள். 2005 ஆம் ஆண்டு தான் தெரு சர்வே எண் ஆகிய இரண்டு தரம் தாண்டி வகைபாடுகள் என்ற புதிய பிரிவுகளை ஏற்படுத்தி அதன் படி வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தார்கள் அதன் படி  பாசன ஆதாரங்களை பொறுத்து 13 வகை பாடாகவும், மனையிடங்களை குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை அடிப்படையில் 12 வகைபாடுகளையும் உருவாக்கி அதன் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்தார்கள்.      இது மட்டும் இல்லாமல் 2005 ஆம் ஆண்டு தான் வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பதற்காக பொது மக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டது ஆக 2005 ஆம...