முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 6-வது பாகம்) 20. இந்த வரைவு வெளி வருவதற்கு முன்பு உங்கள் பகுதிகளில் நில ஆர்ஜிதம் முன்மொழிவு நோட்டீஸ் கொடுத்திருந்தால் அந்த நிலத்திற்கெல்லாம் உண்மையான சந்தை மதிப்பு போடாமல் அதற்கு குறைவாகவே MVG நிர்ணயிக்க வாய்ப்பிருக்கிறது 21. பஞ்சம நிலங்களை மீட்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களுக்கு சொல்வது என்னவென்றால் பஞ்சம நிலங்களுக்கு “0” ZERO மதிப்பு போட வேண்டும் அங்கு MVG பகட்டு மதிப்பாக போடுவதால் அல்லது ஏதோ ஒரு மதிப்பு போடுவதால் அது பஞ்சம நிலம் இல்லை என்று சாதாரண பொது மக்கள் நினைத்து விட்டு அதனை வாங்க விற்க ஆரம்பித்து விடுவார்கள் எனவே அதனை தடுப்பதற்கு பஞ்சம நிலம் ஆதாரம் உங்களிடம் இருந்தால் அதனை வைத்து இந்த MVG வரைவை ஆட்சயபனைகள் செய்ய வேண்டும் 22. இந்து அற நிலையத்துறை மற்றும் வக்ப் போர்டு நிலங்களில் வீடுகளில் வசித்து வருகின்ற மக்கள் வாடகையில் வாழ்ந்து வருகிறார்கள் . இந்த MVG உயர்ந்தால் அதன் அடிப்படையில் வாடகையும் உயர்த்தப்பட வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு உருவாக்கிய MVG யை வைத்து இ...