பதிவு செய்யும் நோக்கத்துடன் எழுதி வைக்கப்பட்ட ஆவணங்களை எவ்வளவு காலத்திற்குள் சார் பதிவகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்?

ஒரு கிரையப்பத்திரம் ஒரு விடுதலைபத்திரம் ஒரு செட்டில்மென்ட் பத்திரம் ஒரு பாகப்பிரிவினை பத்திரம் ஒரு குடும்ப ஏற்பாடு ஏதோ ஒரு சொத்து கைமாறு வதற்காக பத்திரம் பேப்பர் வாங்கபட்டு பத்திரத்துக்கான ஷரத்துக்கள் எல்லாம் எழுதி டைப் அடித்து பத்திரம் உருவாக்கி வைத்து விடுவார்கள். வாங்குபவருக்கோ விற்பவருக்கோ பத்திர ஆபிஸ் முன்பு கருத்து வேறுபாடு வந்துவிடும்.பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் வந்துவிடும். அல்லது பத்திர ஆபிஸுக்கு வரும் வழியில் துக்க செய்தி வந்துவிடும் இப்படி பல காரணங்களால் பத்திர பதிவு தள்ளி போகும். அப்பொழுது தயார் செய்து வைத்த பத்திரங்களில் தேதி எல்லாம் டைப் அடித்தாயிற்றே என்று கவலைபட தேவையில்லை .மேற்படி ஆவணங்களை பதிவதற்கு 4 மாதம் அவகாசம் இருக்கிறது . அதேபோல நீதிமன்ற தீர்ப்பு வந்த தீர்ப்பானது பத்திரப்பதிவு அலுவலகத்தில் வந்து பதிய வேண்டும் தீர்ப்பு வந்துவிடும் ஆனால் ஜட்ஜ்மெண்ட் காப்பி வருவதற்கு கால தாம...