Posts

Showing posts from August 24, 2024

ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 3

Image
ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 3 விவசாயிகளுக்கு நிலத்தின் சட்டங்கள் தெரிவித்தால் எஸ்டேட்டுகளில் சர்வே நடத்தி செட்டில்மெண்ட் ஏற்படும் நிலங்களில் செட்டில்மெண்ட் அதிகாரிகள் விவசாயிகளை கலந்து ஆலோசிப்பது இல்லை அதிகாரிகள் துணையுடன் சாத்தியமான அளவு அதிக பட்ச நிலங்களை சொந்த நிலமென எஸ்டேட்காரர்கள் தங்கள் கணக்கில் பதிவு செய்து கொண்டார்கள். இது போன்ற நிகழ்வுகளில் கீழ்வார உரிமையில் உள்ள விவசாயிகள் அல்லது குத்தகையில்  இருப்பவர்களை எஸ்டேட்காரர்களின் சொந்த நிலங்களிலிருந்து குத்தகை விவசாயிகள் வெளியேறுவதை தடுக்க ஜமீன் எஸ்டேட் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சட்டம் 1949 இல் நிறைவேற்றப்பட்டு குத்தகை விவசாயிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தது மேலும் பழைய குத்தகை பாக்கி, பிக்கிரி பாக்கிக்காக குத்தகைதாரரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை எஸ்டேட்தாரர்கள் ஏலத்தில் விடுவதை தடை செய்தது. இந்த சட்ட நடைமுறைகள் தெரியாததால் பல எஸ்டேட் கிராமங்களில் கீழ்வார உரிமையும் குத்தகை உரிமையும் இழந்து கிராமத்தை விட்டு வெளியேறிய ராயத்துக்களில் கதையை இன்றைய தலைமுறையினர் தங்கள் வீட்டில் இருந்த பழைய ஆவணங்களை கொண்டு வரும்பொழுது