சம்மத பத்திரம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
1) சம்மத பத்திரத்தை ஒப்புதல் பத்திரம் என்றும் ஆங்கிலத்தில் concern deed என்றும் Ratification Deed என்றும் சொல்வார்கள். 2) ஒரு பங்கு பிரிக்கபடாத கூட்டு சொத்தை வாரிசுதாரர்கள் அனைவரும் சேர்ந்து விற்பனை செய்து விடுகின்றனர்.அப்பொழுது ஒரு வாரிசுதார் மட்டும் கையெழுத்து போடாமல் விடுபட்டு விட்டது. 3) உதாரணமாக பெண் வாரிசுகளிலோ ஒருவர் சிறு வயதிலேயே குடும்பத்திற்கு பிடிக்காதவர்களிடம் அல்லது சாதி மாறியோ திருமணம் செய்து கொண்டு வேறு ஊரில் செட்டில் ஆகிவிடுவர். 4) சில வாரிசுகள் சின்ன வயதிலேயே ஊரை விட்டு வீட்டை விட்டு ஒடி விடுவார்கள் சிலர் காணாமல் போய்விடுவார்கள்.அல்லது சில வாரிசுகள் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவராக இருந்து முதல் மனைவி மக்களோடு ஒட்டாமலே இருப்பவர்களும் இருப்பார்கள். 5) ஈகோ வினால் சண்டையிட்டு கொண்டு பங்கு கிடைக்க கூடாது என்று தனக்கு பிடிக்காத வாரிசுகளை மறைப்பவர்களும் உண்டு. இப்படி பல வகையில் விலகிபோனவர்கள் விலக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு சொத்தில் உரிமை கூறு உரிமைபங்கு அல்லது ஏதாவது வழி,நீர்பாய்ச...