ஆழமாக சர்வே பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 29 செய்திகள்..

1)சர்வேக்கள் பல வகைபடும் அவை பூமியின் கீழடுக்கில் உள்ள (lower crust) இல் இருக்கிற பலவிதமான பொருட்களை ஆய்வு செய்வதற்கும்(geological survey )கனிமவளங்கள் தாதுக்கள் நிலக்கரி எரிவாயு போன்றவற்றை ஆய்வு செய்வதற்கும்(mine survey ) 2)இராணுவத்திற்காக தாக்குதல் எதிர்தாக்குதல் பாதுகாத்தல் புள்ளிகளை குறித்தல் சர்வே செய்வதும்,தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் பழங்கால நினைவு சின்னங்களை கண்டுபிடிக்கவும் சர்வேக்கள் உதவிகரமாக இருக்கிறது. 3)மேற்கண்ட சர்வேக்கள் எல்லாம் மிக முக்கியமானது ஆனால் நிபுணர்களுக்கு மட்டும் புரிய கூடியது சாரதாரண மக்களுக்கு இவ்வளவு பின்புலம் இந்த சர்வேக்களில் இருக்கிறதா என்று தெரியாது. 4)நம்ம மக்களுக்கு தெரிந்ததைல்லாம் நம்ம வயற்காட்டை நிலத்தை அளக்க வரும் சர்வேயர் மற்றும் சர்வே தான்.அந்த சர்வேக்கு பெயர் வருவாய்துறை நிலதீர்வைக்கான சர்வே என்று பெயர். 5)சர்வே (Survey)என்பது ஒரு அற்புதமான கலைஅவை நிலத்தையோ வானத்தையோ கடலையோ படுக்கையான நீளத்தை அகலத்தை பலவிதமான கணிதமுறையில் பலவிதாமான உபகரணங்கள் கொண்டு அளப்பது ஆகும். ...