முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 19-வது பாகம்) சந்தை மதிப்பு(MARKET VALUE), வழிகாட்டி மதிப்பு (GUIDE LINE VALUE )சந்தை மதிப்பு வழிகாட்டி (MARKET VALUE GUIDE LINE) யின் பரிணாம வளர்ச்சி வரலாறு பதிவுத்துறையில் பொது மக்கள் பத்திரங்கள் பதியும் பொழுது அரசு நிர்ணயத்துள்ள வழிகாட்டி மதிப்பின்படி தான் முத்திரைத்தாள் வாங்கி சொத்துக்களை பதிவார்கள். அதற்கு ஏற்றவாறு பதிவு கட்டணங்களையும் செலுத்துவார்கள். இந்த வழிகாட்டி மதிப்பு குறித்து காலம் காலமாக பொதுமக்களுக்கும், பதிவு துறைக்கும் முரண்பாடுகளும், சிக்கல்களும் இருந்து கொண்டே வருகிறது. மேலும் “ வழிகாட்டி மதிப்பு “ என்ற சொல்லும், “ சந்தை மதிப்பு “ என்ற சொல்லாடலும் சந்தை மதிப்பு வழிகாட்டி என்ற எந்த சொல்லும் இன்று வரை சாமானியர்கள் காதில் விழுந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அவற்றைப் பற்றிய விபரங்கள் புரியாமல் தள்ளி நின்றே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் சாமானிய பொது மக்கள்! அவர்களுக்கு இதனை பற்றி பாமரத்தனமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று இதனை எழுதுகிறேன். உ...