தவறான பத்திரங்கள்,பிழையுள்ள பத்திரங்கள் சட்ட குழப்பமுள்ள பத்திரங்களை மற்றும் போலி பத்திரங்கள் உருவாகாமல் இருக்க தமிழக அரசு பிரெஞ்சு பதிவு சட்டத்தின் கீழ் பாண்டிசேரியில் நடைமுறையில்இருந்த நொத்தேர்(Notaire) லைசென்சு அமைப்பு முறையை கொண்டு வர வேண்டும்!!

தமிழகத்தில் தற்பொழுது அதிக அளவில் போலி பத்திரங்கள் தவறான பத்திரங்கள் பிழையான பத்திரங்கள் சட்ட குழப்பத்தை ஏற்படுத்தும் பத்திரங்கள் இரண்டு முறைகளுல் தான் உருவாகின்றன ஒன்று வருவாய் துறை ஆவணங்களான எஸ் எல் ஆர் , யூடிஆர் போன்றவற்றின் நிலையான பதிவேடுகளையும் நத்தம் நிலவரி திட்ட நிலையான பதிவேடுகளையும் பட்டா , சிட்டா , அடங்கல் , நத்தம் பட்டா போன்றவற்றை சர்வே எண்கள் பரப்பு போன்றவற்றை திருத்தியோ வேறு நபர் சேர்த்தோ அல்லது அதில் உள்ள ஒரு நபரின் பெயரை நீக்கியோ வேறு பெயர் சார்பதிவகத்தில் பதிவிற்கானஆவணங்களாக தாக்கல் செய்து மேற்படிபத்திரங்களை உருவாக்கிவிடுகின்றனர் இரண்டாவதாக பதிவு துறை சார்பதிவகத்தில் தவறான வாக்குமூலம் அளித்தல் முன் பத்திரத்தில் திருத்தி அதனடிப்படையில் புதிய பத்திரங்கள் பதிவுசெய்தல் பதிவுசெய்யபடாத போலியான கூரசீட்டு வழியுரிமை பொதுசுவர பொது வழி ஒப்பந்தங்களை புதிய பத்திரத்தில் சேரத்துவிடல் copy of the document போட்டு அதன்படி போஙி பத்திரங்கள் உருவாக்குதல் , ஆள்மாறாட்ட செய்தல் போன்றவ...