வெளிநாடுகளில் சம்பாதிக்கும் பால்புட்டி பசங்க சொத்து விஷயத்தில் ஜாக்கிரத்தை!!

நான் தொடர்ந்து சொல்லிவருவதுதான் சொத்து விஷயத்தில் உணர்வுகள் உணரச்சிகள் இல்லா மரகட்டையாக இருங்கள் என்று இந்த கட்டுரையில் தாய்பாசம் அதிகம் உள்ள மகன்கள் சொத்துக்களை எப்படி இழக்கிறார்கள் என்று கூறுகறேன். ஆண்களில்இப்படி ஒரு வகை இருக்கிறார்கள் ஒன்று எவ்வளவு வளர்ந்தாலும் தன் அம்மாவுக்கு எப்பொழுதும் குழந்தையாகவே இருப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் அதிககாலம் தாய்பால் குடித்தவர்களாகவும் அம்மா அடிக்கடி நான் எவ்ளோ கஷ்டபட்டு உன்னை வளரத்தேன் என்று சொல்லி மகனின் மனதில் நன்றியுணர்ச்சியை அதிகம் விதைத்துவிடுவார்கள். இப்படி இருக்கிற ஆண்களுக்கு பொண்டாட்டி வந்தாலும் பொண்டாட்டி பாடு திண்டாட்டம் தான்.தாய்க்கும் தாரத்திற்கும் நடுவுல பேலன்ஸ்டா போகனும் என்று நினைக்கமாட்டார்கள் இந்த ஆண்கள். எங்க அம்மாவையே இப்படி பேசுறியா ன்னு சண்டைக்கு வருவார்கள். இல்லை என்றால் அம்மா பேசுவதை கண்டுக்காத அட்ஜஸ்ட் செஞ்சிக்கோ என்று திரைமறைவில் மனைவியிடம் சொல்வார்கள். இது போன்ற நபர்களை நான் ஜெண்டில் மேன் அல்லாதவர்கள் எனபேன் செல்லாமக தாய்பால் மறக்காத பால்புட்டி பசங்க என்பேன். இப்படி இருப்பவர்கள். வெளிநாடுகளி...