புதிதாய் ஏற்படும் காதல் உறவுகளால் சொத்துகளும் சிக்கல்களில் சிக்குகின்றன.

உயில் பத்திரம்,செட்டில்மெண்டு பத்திரம்,ரத்து பத்திரம்,ஜீவனாம்ச பத்திரம் போன்ற பத்திரங்கள் எல்லாம் வெறுமனே பத்திரங்களாக பார்க்க முடியாது.அந்த பத்திரங்களுக்கு பின்பு பலவேறு விதமான பாச பிணைப்புகளும் நேச உறவுகளும் இருக்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம். ஒருவருடைய மனநிலை சீரான(harmoney) நிலையில் இருந்தால்தான் சொத்து சம்மந்தபட்ட முடிவுகளும் சீரானதாக இருக்கும். ஆனால் சொத்துக்கள் பல சிக்கல்கள் உருவாவதற்கு காரணம் அன்பின் குறைபாடும் உறவுகளை ஆதிக்கம் செலுத்துதலும் Transactions attachment possession controlled போன்ற குணங்கள் எல்லாம் அனபின் காதலின் பெயரால் பலர் சொத்துகளை பாடாய் படுத்துகிறது. இந்த உளவியல் சிறு வயதில் இருந்தே கொஞ்சம் புரிந்ததால் சொத்துக்கள் விற்பனை ஏற்பாடு செய்ய அட்வானஸ் போடும்போதும் கிரயபத்திரம் போடும் போதும் மனிதர்களின் உணர்வுகளை சாமர்த்தியாமாக கையாண்டு அந்த வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்து இருக்கிறேன். பல வியாபரங்களில் அண்ணன் தம்பி அக்கா தங்கை தந்தை மகன் உறவுசிக்கலகளை தீர்த்தபிறகுதான் பத்திரமே நடக்கும் கமிசன் வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்...