குடிசை மாற்று வாரிய வீடுகளை வாங்கலாமா? தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்!

1) குடிசை வாழ் மக்களுக்கு நல்ல குடியிருப்புகளையும், மேம்படுத்தபட்ட வாழ்க்கைதரத்தையும்அளித்து குடிசை வாழ் மக்களுக்கு மறுவாழ்வும் குடிசைபகுதிகளை மேம்படுத்தி உயர்த்துவதும் தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியத்தின் தலையாய பணி ஆகும். 2) நடுத்தர அடிதட்டு மக்கள் சென்னையில் ஒரளவுக்கு நாகரீகமாக வாழ முடியும் என்றால் இந்த குடிசை மாற்று வீடுகளே காரணம். 3) குடிசை மாற்று வாரியம் அடிமனைகளாகவும் வழங்கும் அல்லது அடுக்குமாடி வீடுகள் கட்டி வீடுகளாகவும் வழங்கும். 4) கே.கே.நகர் எம்ஜிஆர் நகர்,பள்ளிக்கரணை பாலாஜி நகர்,மந்தைவெளி காரைகுட்டை ,சின்னமலை சைதாபேட்டை பகுதிகளில் மனைகளாக ஒதுக்கபட்டதையும் அதன் ஆவணங்களையும் நான் பாரத்து இருக்கிறேன். 5) சென்னை முழுக்க இருக்கும் சேரிகள் குப்பங்கள் தோட்டங்கள் என எல்லா பகுதிகளிலும் மூன்று மாடி 4 மாடி குடியிருப்பு வீடுகள் 200 சதுரடிக்கு கீழே கட்டி குடிசைமாற்று வாரியம் விற்பனை செய்த வீடுகளை பார்க்கலாம். 6) சென்னை ஓ.எம்ஆர...