Posts

Showing posts from August 5, 2024

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
 முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!  (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 21-வது பாகம்) இந்திய முத்திரை சட்டத்தில் சந்தை மதிப்பு என்பது அரசியல் அமைப்புக்கு எதிரானது சொத்து பரிமாற்ற சட்ட புரிதல் உள்ள  கிரைய மதிப்பு மாறாக உள்ளது என்றனர். அதனை தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டில் சட்ட போராட்டம் செய்து அப்படி இல்லை என்று 47A பிரிவில் உள்ள சந்தை மதிப்பை காப்பாற்றியது. (W.P.No.2563/1997, 529/1971, 1383/1971, W.A.No.47, 48 & 49/1979 ) இப்படி “சந்தை மதிப்பு“ என்கிற சொல்லாடலுக்கு வந்த சோதனையை பதிவுத்துறை சிரமப்பட்டு காப்பாற்றியது. அதேபோல் “வழிகாட்டி மதிப்பு “ என்று ஆண்டுதோறும் உயர்த்தி வருவது அந்த காலகட்டத்தில் பத்திரிக்கையில் பள்ளிகூட மாணவர்களுக்கு ரிசல்ட் வருவது போல GUIDELINE VALUE வந்து கொண்டிருந்தது. ஆனால் இந்த வழிகாட்டி மதிப்பு “Guide Line Value”  என்கிற சொல்லாடல் பதிவு சட்டம் முத்திரைச் சட்டம் உட்பட எந்த சட்டத்திலும் இல்லை அது முத்திரை சட்ட விதிகளில் “Tamil Nadu Stamp Prevention of undervalue of instrument Rule 1968” என்கிற விதிகளின்படி “வழிகாட்டி மதிப்பு ப