எப்படி இருந்த ராயப்பா நகர் எப்படி ஆயிடுச்சி மக்களே!!

எப்படி இருந்த ராயப்பா நகர் எப்படி ஆயிடுச்சி மக்களே!! தாம்பரம் -வரதராஜபுரம் இராயப்பா நகர் 2004 களில் பல வியாபரங்கள் செய்து இருக்கிறேன். சோழிங்க நல்லூரில் இருந்து தாம்பரம் வந்து அங்கிருந்து முடிச்சூர் ரோடில் அட்டை கம்பெனி என்று பஸ் ஸ்டாப்பில் இறங்கி இராயப்பா நகர் என்ற பெரிய மனை பிரிவிற்குள் முள்ளும் புதருமாக man vs wild இல் செல்லும் பியர் கில்ஸ் போல முள்ளு மரங்களுக்கு இடையில் புகுந்து புகுந்து குனிந்து சில இடங்களில் ஊர்ந்து சென்று இருக்கிறேன். அப்படி எல்லாம் சென்று மனைகளின் கற்களை பார்த்து இருப்பேன் என்று நினைத்திட வேண்டாம் . இப்பொழுது இராயப்பா நகரின் கிழக்கு பக்கத்தில் தென்வடலாக போடபட்டு இருக்கும் மீஞ்சூர் பைபாஸ் அப்பொழுது highways நில எடுப்பிறகாக ஆர்ஜிதம் செய்ய மார்க் செய்யபட்ட கற்கள் அப்போதைய மனை பிரிவில் நட்டு இருந்தார்கள். அதனை தேடிதான் அப்பொழுது முள்ளுக்குள் செல்வேன். வாடிக்கையாளர் வாங்கிய மனைகள் வாங்க போகும் மனைகள் நில எடுப்பிற்குள் வருகிறதா என்று நேரடியாக ஆராய்ந்து பார்த்து சொல்வேன்.அவ்வளவு முட்புதராக மண்டி இருக்கும் மனை பிரிவு கடந்த சில வருடங்களில் மேக்கப் போட்ட புது பெண...