சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை!
சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! அரசு பல்வேறு பொதுதேவைக்காக சாமானியர்களின் நிலங்களை கையகபடுத்தி நல்ல திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது. சிப்காட்,சிட்கோ,சிறப்பு பொருளாதார மண்டலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்புற வாழ்விட வாரியம்” பொதுப்பணித்துறை மற்றும் CMDA போன்ற அரசு துறைகள் சாமானியர்களின் நிலங்களை கையப்படுத்துகிறது.அப்படி கையப்படுத்தும் பொழுது அரசு நில ஆர்ஜிதம் செய்யும் நிலத்திற்கு ஈடாக சாமானியருக்கு நட்ட ஈட்டை கொடுக்கும்.மேற்படி நஷ்ட ஈடு அரசு நிலத்தை எடுக்கும் நேரத்தில் இருக்கும் சந்தை மதிப்பு வழிகாட்டியை பார்த்துதான் சாமானியன் நிலத்திற்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிப்பார்கள்.அந்த நேரத்தில் வழிகாட்டி மதிப்பு குறைவாக இருந்தால் நிலத்தை இழக்கின்ற சாமானியர்களுக்கு நஷ்டஈடு குறைவாக கிடைக்கும்,அதுவே நிலம் கையகபடுத்துகின்ற நேரம் சந்தை மதிப்பு வழிகாட்டி நியாயமாக இருந்தால் நிலத்தை இழக்கும் சாமானியனுக்கு நஷ்டஈடு நியாயமாக கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்...