Posts

Showing posts from December 15, 2024

கவுல் என்றால் என்ன?

Image
  வருவாய்துறையில் “கவுல்” என்ற வார்த்தை உண்டு, பழைய ரெவன்யூ கணக்குகளில் கடைசி நெடுவரிசை, கிடை வரிசை பட்டியலில் கவுல் என்ற வார்த்தை எழுதப்பட்டு இருக்கும் அல்லது B.S. No 29, என்று எழுதப்பட்டு இருக்கும். பழைய SLR, RSLR கணக்குகளில் பல இடங்களில் நான் இதனை பார்த்து இருக்கிறேன் பென்சிலில் கூட எழுதி வைத்திருப்பார்கள். மேற்படி நிலங்களுக்கு அதிகமான தீர்வை விதிக்காமல் மிதமான தீர்வை விதித்து சிறு காடு போன்ற நிலங்களையும் கோரை புல் விளைந்து நிற்கின்ற நிலங்களையும், சேற்று நிலங்களையும் கழி வேலி நிலங்களையும் சீர்திருத்தி சாகுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த கவுல் முறை ரெவென்யூவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில பகுதிகளில் நிறைய நாகதாளி, காடுகள் இருக்கும் அதனை சீர்திருத்த 20 வருடம் வரை கவுல் கொடுத்த ஆவணத்தை பார்த்து இருக்கிறேன் இந்த கவுல் 5 வருடம், 10 வருடம், 20 வருடம் என்று கொடுப்பார்கள் சென்னையில் பொழிச்லூருக்கு அருகில் இன்றும் கவுல் பஜார் என்று பெயர் இருப்பதை கவனிக்கலாம் கவுல் பிராமணர்கள் என்று காஷ்மீரில் பண்டிட் பிராமணர்களின் ஒரு பிரிவினர் இருக்கிறார்கள் அந்த கவுல் சமஸ்கிருதம் நான் சொல்கிற சொல...