விவசாயத்தை காப்பாற்ற வழக்கறிஞர்யானை இராஜேந்திரன் அவர்கள் தன்வீட்டம்மாவுடன் வயல்காட்டிற்கு களைவெட்ட வருவாரா ?

விவசாயத்தை காப்பாற்ற வழக்கறிஞர்யானை இராஜேந்திரன் அவர்கள் தன்வீட்டம்மாவுடன் வயல்காட்டிற்கு களைவெட்ட வருவாரா ?

சமீபத்திய பத்திரப்பதிவு தடை சம்மந்தமாகYouTube வீடியோக்களைபார்த்துக்கொண்டிருந்த போது அதில் ஒருசெய்தி சேனலின் ( NEWS 18) விவாதநிகழ்ச்சியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர்ரியல் எஸ்டேட் சங்க தலைவர் விருகைகண்ணன், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவழக்கறிஞர் பாலு, பத்திரப்பதிவு தடைக்கானநீதிமன்ற உத்தரவிற்க்கு காரணமானவழக்கறிஞர் யானை இராஜேந்திரன்அவர்கள் பங்கெடுத்து பேசி இருந்தனர்.நிகழ்ச்சியை செய்தியாளர் குணசேகரன்(NEWS 18) ஒருங்கிணைத்திருந்தார்.வழக்கறிஞர் பாலு மற்றும் சட்டப்பஞ்சாயத்துஇயக்கத்தினர் பேசிய கருத்துக்களில்களப்பணி அனுபவங்கள் குறைவாகஇருந்தன, வழக்கறிஞர் யானைஇராஜேந்திரன் ஒட்டுமொத்த விவசாயஅழிவிற்கே ரியல் எஸ்டேட் தான் காரணம்என்று மையப்படுத்தி பேசியிருந்தார்மேற்கண்டவை சம்மந்தமாக எனதுபுரிதல்களை இந்த பதிவின் மூலமாகசொல்ல விரும்புகிறேன்.

1.சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் மற்றும்ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் அவர்கள்DTCP மற்றும் CMDA மனைகளுக்கு மட்டும்தான் LOAN வங்கிகள் கொடுக்கும் என்று சொல்லியிருந்தார்கள் ஆனால் உண்மை நிலவரம் தமிழகம் முழுவதும் இருக்கின்ற கிராம நத்த பட்டா இடங்களில் வீடு கட்டுவதற்கு LIC HOUSING FINANCE, இதரHOUSING FINANCE, IDBI வங்கியில் உள்ள RURAL HOUSING SCHEME தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் கடன் வசதி செய்து கொடுக்கப்படுகிறது. மேலும்இந்திரா வீட்டு வசதி திட்டம், பசுமை வீட்டு திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் அரசு DTCPமற்றும் CMDA அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளுக்கு வீடு கட்டுவதற்கு நிதியுதவி செய்து வருகின்றனர். மேலும்வங்கிகள் கடன் கொடுப்பதற்க்கு நிலத்தின் தன்மையை விட மக்களின் தன்மையையே பார்க்கிறது. (பன்னாட்டு வங்கிகளை தவிர்த்து )

உதாரணமாக காவல் துறையினர், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், சேரிக்களில் வசிப்பவர்களுக்கெல்லாம் DTCP அல்லது CMDA மனைகளே வைத்திருந்தாலும் வங்கி எளிதில் கடன் கொடுத்துவிடுவதில்லை.

சட்டப்பஞ்சாயத்து இயக்கம் அரசு எந்திரத்தில் உள்ள பழுதுகளை சரிசெய்யவே தோன்றி இருக்கிறது. அப்படிப்பட்ட அரசு எந்திரத்தை எந்தவித ரியல் எஸ்டேட் காரர்களும் தன்வசப்படுத்துவதற்காக விதிகளை மீறுவதற்காக அரசு எந்திரத்தை ரியல் எஸ்டேட் காரர்கள் தூண்டி விடுவதில்லை அரசு எந்திரத்தின் படி இசைந்து போக வேண்டிய நெருக்கடியில் தான் ரியல் எஸ்டேட் காரர்கள் இருக்கிறார்கள் ஏனெனில் கடன்களிலும் வட்டிகளிலும் திரட்டப்பட்ட முதலீடுகள் காலதாமதத்தால் வீணடிக்கப்படக்கூடாது என்பதற்காக பழுதுள்ள அரசு எந்திரத்தோடு இசைந்து போக வேண்டி இருக்கிறது. அரசு எந்திரம் வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையை அதிகரித்து விட்டால் ரியல் எஸ்டேட்டில் விதிமீறல்கல் அறவே இருக்காது, சட்டப்பஞ்சாயத்து போன்ற இயக்கங்கலும் தோன்ற வாய்ப்பு இருக்காது.

  வழக்கறிஞர் பாலு அவர்கள் ரியல் எஸ்டேட்டில் உடனடியாக சம்பாதித்து கார், பங்களா என்று ரியல் எஸ்டேட் அதிபர்கள் வாங்கி விடுகிறார்கள் என்று போகிறபோக்கில் ரியல் எஸ்டேட் காரர்கள் மறைமுகமாக அதிக இலாபம் பெறுகிறார்கள் என்று சொல்லியிருந்தார். எனக்கு தெரிந்து அவர் கட்சி நிர்வாகிகள் பலர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களிடம் நேரில் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டுமாறு பாலு அவர்களிடம் கூறுகிறேன். என்னவென்றால் அவர்கள் பெறுகின்ற இலாபத்திற்கு ஈடாக அதிக அளவு PHYSICAL AND MENTAL PRESSURE களை அவர்கள் விலையாக கொடுத்தாகவேண்டும்.

மேலும் எந்த தொழிலிலுமே ஈசி மணி என்பது கிடையாது பல RISK FACTOR – களை தாண்டி தான் வரவேண்டி இருக்கிறது. ரியல் எஸ்டேட் துறையில் முதல் போட்டு செய்கின்ற முதலாளி முதல் அடிநிலையில் இருக்கின்ற2% கமிஷன்காக தரகு வேலை செய்கின்றவர் வரை உழைப்பை மற்றும் அர்பணிப்பை கொடுத்து தான் இலாபத்தை பெற்று கொண்டு இருக்கின்றார்கள்.

என் அனுபவத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை விட வழக்கறிஞர் தொழிலில் L.A.O.P, M.C.O.P வழக்குகளில் உழைப்பே இல்லாமல் வெறும்TEMPLATE DRAFT – களை வைத்து மட்டுமே வழக்கறிஞர்கள் கோடிகணக்கில் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள். L.A.O.P வழக்குகளில் நிலத்தை பறிகொடுத்த பொது மக்களுக்கு நஷ்டஈடு அரசிடம் இருந்து பெற்று தருகிறேன் என்று சொல்லி நிறைவான திருப்தியான நஷ்டஈட்டு தொகையை உடனடியாக பெற்று தருவதே இல்லை. பல்வேறு விதமான மன உலைச்சல்களுக்கும் அலைச்சல்களுக்கும் நிலத்தை பரி கொடுத்த மக்கள் வழக்கறிஞர்களால் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். ரியல் எஸ்டேட்டிலாவது நிலத்தை கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு, தரகர்களுக்கு இடையில் WIN – WIN SITUATION நிலவுகிறது. L.A.O.P வழக்குகளில் அவ்வாறு நிலவுகிறதா என்பதை வழக்கறிஞர் பாலு அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

நான் சொல்ல வந்த முக்கியமான விஷயம் என்னவென்றால் வழக்கறிஞர் யானை இராஜேந்திரன் அவர்கள் பேசும்போது விவசாயம் குறைந்து போச்சு, பயிர் செய்வது குறைந்து போச்சு எங்கு பார்த்தாலும் மனை பிரிவுகளாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார். அவர் சொல்வதில் சமூகத்தின் மீதும் நாட்டின் மீதும் இருக்கின்ற அக்கறை வெளிப்படுகின்றதே தவிர எதார்தத்தை உணர்ந்த்தாக தெரியவில்லை.

வீட்டு மனைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அவர் சொல்வதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் விவசாயம் முற்றிலுமாக ஒழிந்து போவதற்கு ரியல் எஸ்டேட் தான் காரணம் என்பது போல் ஒரு பிம்பத்தை அவர் உருவாக்குவது முற்றிலும் தவறானது.

உலக மயமாக்கலுக்கு பிறகு எந்த இடம் விவசாய இடமாக இருக்க வேண்டும், எந்த இடம் தொழிற்கூடங்களாக இருக்க வேண்டும், எந்த இடம் வீட்டு மனைகளாக இருக்க வேண்டும் என்று முற்றிலும் முடிவு செய்வது  அரசின் கட்டுபாட்டில் இல்லைஎன்பதே எதார்த்தம்.

சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது நாட்டிற்குள்ளேயே ஒரு தனி நாடு அந்தஸ்தில்தான் இருக்கிறது என்பதை விவரம் அறிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.பசுமை புரட்சி என்ற பெயரில் இருக்கின்ற மண்வளத்தை உப்பை போட்டு கெடுத்து விவசாயத்தை அழித்தது ரியல் எஸ்டேட் அல்ல.

 மதுரை உயர்நீதிமன்றம், திருநெல்வேலி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எனக்கு புரிந்தவரை விவசாயத்தின் உயிர் நாடியாக விளங்க வேண்டிய நீர் நிலைகளின் மேல் தான் இருக்கிறது. இவற்றை போல் பல இடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படுகின்றது இவற்றை செய்தது ரியல் எஸ்டேட் காரர்கள் அல்ல.

விவசாயம் செய்பவர்களை பொறுத்தவரை விவசாய கூலிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள், பெரும் பண்ணைக்காரர்கள் என்று மூன்று தரப்பு மக்கள் இதில் ஈடுபட்டிருந்தார்கள். ஆண்ட வீட்டிற்க்கு படி வேலை செய்து இருந்த விவசாய கூலிகள் கடந்த 30 ஆண்டுகளில் படித்து பல்வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டதால் விவசாயத்திற்கான மனித வளம் பெருமளவில் குறைந்து விட்டது என்பது ஒரு காரணம் கிராமங்களை விட்டு மக்கள் வேறு வேலை வாய்ப்புகளுக்காக நகரங்களில் குடி பெயர்ந்து வருவது ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது இதனாலும் விவசாயத்திற்கான மனிதவளம் குறைந்துள்ளது. .

சிறு மற்றும் குறு விவசாயிகள் அதாவது 1/2 ஏக்கரிலிருந்து 5 ஏக்கருக்குள் நிலத்தை வைத்திருப்பவர்கள் தற்பொழுது தானே நிலத்தில் பாடுபட்டால் ஒழிய விவசாயத்தை செய்ய முடியாது என்பது தான் எதார்த்த நிலை, உப்புகளை, பூச்சி மருந்துகளை, ஆள் கூலிகளை எல்லாம் போட்டு முழு குடும்பத்தின் அர்பணிப்பு என அனைத்தையும் முதலாக போட்டால் கூட அவனுக்கு ஒரு நிறைவான இலாபமும் குடும்ப பாதுகாப்பும் விவசாயத்தில் இல்லை என்பதே எதார்த்தம். அப்படி இருக்கும் பொழுது தன்னுடைய பிள்ளைகளை விவசாயத்தில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லியே வளர்க்கிறார்கள் அவர்களும் பெருநகரங்கள், வெளிநாடுகள் என்று வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

பெரும் பண்ணைக்காரர்களோ தங்களுடையவிவசாய நிலத்தை மூலதனமாக வைத்து வேறு தொழில்களில் தொழிலதிபர்களாக மாறி கொண்டிருக்கின்றனர். இந்த எதார்த்த நிலை எல்லாவற்றையும் மறந்து விட்டு ரியல் எஸ்டேட் தான் காரணம் என்று பொத்தம் பொதுவாக சொல்வது தவறானது ஆகும்.

1.விவசாயத்தை வளர்க்க வேண்டுமென்றால் நிலமில்லாத விவசாய தொழில் செய்கின்றவர்களுக்கு ஏக்கர் கணக்கில் தரிசாக உள்ள இடங்களை அவர்களுக்கு பிரித்து கொடுக்கலாம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கடன் வசதிகளை எளிமைப்படுத்தி திருப்பி செலுத்தும் தவணை தொகைகளை எளிமைப்படுத்தி, மானியங்களை அதிகப்படுத்தி விவசாயத்தை அதிகப்படுத்தி கடன் தொல்லையிலிருந்து மீட்டு அவர்களின் தற்கொலைகளை குறைக்கலாம். சமீபத்தில் கூட கொங்கு பகுதியில் டிராக்டர் வாங்கிய கடனிற்காக வங்கியாளர்களால் அந்த விவசாயி தாக்கப்படட்து செய்திகளில் வந்தது. இதுபோன்ற விவசாயிகளுக்கு எதிரான விஷயங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கலாம். விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்தி யூக வnigaங்களை கட்டுபடுத்தி இடைத்தரகர்களை கட்டுபடுத்தி விவசாயிகளுக்கு உற்பத்தி பொருளுக்கு நல்ல விலை கொடுக்கலாம். இங்கெல்லாம் சிஸ்டம் பெய்லியர் ஆன பட்சத்தில் தான் அவர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறுவதற்க்கு ஏதாவது கொழுகொம்பு கிடைக்குமா என்று பார்த்துகொண்டு இருக்கின்ற நேரங்களில்  பெருநகரங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் தான் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி அடைகின்றன. இவை ஒட்டு மொத்த மாநில பரப்பில் 10% கூட இருக்காது. இந்த பகுதிகளில் வாழ்கின்ற விவசாயிகள் மட்டும் தான் தன்னுடைய நிலத்தை ரியல் எஸ்டேட் காரர்களுக்கு விற்றுமுழுதாகவோ அல்லது அரைகுறையாகவோ விவசாயத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் இவர்களை பொறுத்தவரை வெள்ளத்தில் மூழ்கி கொண்டிருக்கும் மக்களுக்கு LIFE BOAT – டாக தான் ரியல் எஸ்டேட் இருக்கிறது. 30 ஆண்டுகளாக விவசாயம் செய்து தன்னுடைய பெண் குழந்தையின் திருமணத்திற்கு எதையும் சேர்த்து வைக்க முடியாமல் அவன் சுரண்ட பட்டிருப்பதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. அதனால் விவசாயியும் விவசாயத்தைப்பற்றின் ஏன் கவலைப்பட வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போது தன்னுடைய பெண் குழந்தையின் திருமனத்திற்காக, மகனின் படிப்பிற்காக(விவசாயத்தில் ஈடுபட கூடாது என்பதற்காக) தங்களுடைய நிலத்தை விற்பனை செய்கிறார்கள். அதுவும் ரியல் எஸ்டேட் வள்ர்ந்து வருகின்ற இடங்களில் தான் எல்லா இடங்களிலும் அல்ல ரியல் எஸ்டேட் வளராத இடங்களில் எல்லாம் விவசாயிகள் வெளியேற முடியாமல் தன் வாழ் நாள் முழுவதும் சுரண்டப்படுகின்ற சுழலிலே தான் சிக்கப்படுகின்றான்.

 என்னுடைய அனுபவத்தில் பல விவசாயிகள் நிலத்தை விற்றவுடன் அந்த தொகையில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அடையாத கிராமங்களில் விவசாய நிலங்களை வாங்கி போட்டு விவசாயம் செய்து கொண்டு இருக்கின்றனர்.

நகர பகுதியில் இருக்கின்ற 1 ஏக்கரை விற்று விட்டு கிராம பகுதியில் இருக்கின்ற 20 ஏக்கரை வாங்கி விவசாயம் செய்து வருகின்ற விவசாயத்தை நேசிக்கின்ற விவசாயிகள் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள்.

வழக்கறிஞர் யானை இராஜேந்திரன் போன்றவர்கள் நாளை உணவு பஞ்சம் எதுவும் தனக்கு வந்திட கூடாது என்று விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கிறார்கள். ஆனால் விவசாயம் செய்கின்ற விவசாயிகளின் இன்றையவாழ்க்கையை பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்களா என்று தெரியவில்லை. விவசாயிகள் நன்றாக இருந்தால் தான் விவசாயம் நன்றாக இருக்கும் விவசாயம் நன்றாக இருந்தால் தான் நமக்கு நாளை சாப்பாடு கிடைக்கும் என்பதை எங்களை போன்ற ரியல் எஸ்டேட் காரர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் விவசாயிகளின் இன்றைய வாழ்க்கையை கவனிக்காத அரசு எந்திரத்தின் ஒட்டுமொத்த சிஸ்டம் பெய்லியருக்கு ரியல் எஸ்டேட் கார்ர்கள் எப்படி பொறுப்பாவார்கள்

விவசாயம் பலனளிக்காமல் கஷ்டப்படுகின்ற விவசாயிகளுக்கு அதுவும் பெருநகரங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், நெடுஞ்சாலைகள் அருகிலுள்ள விவசாயிகளுக்கு தான் ரியல் எஸ்டேட் மூலமாக நிலத்தை விற்று விவசாயத்தை விட்டு வெளியேறுகின்ற ஒரு LIFE BOAT - டாக இருக்கின்றது. மீதி தமிழகத்தின் பிற பகுதிகளில் எல்லாம் விவசாயிகள் கஷ்டப்பட்டாலும் அவர்கள் விவசாயம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்று வழக்கறிஞர் யானை இராஜேந்திரன் போன்றோர்கள் விரும்பினால் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அடையாத இடங்களில் தன் வீட்டம்மாவோடு வந்து களைவெட்டிவிவசாயம் செய்து தன் பெண்டு பிள்ளைகளை படிக்க வைத்து கரை யேத்த முடியும் என்ற உறுதியை அவர்களால் கொடுக்க முடியுமா.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்,

மேனேஜிங் டைரக்டர்,

ப்ராப்தம் ரியல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்.



 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற ரியல் எஸ்டேட் சூப்பர் ஸ்டார் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் பிராப்தம் ரியல் எஸ்டேட் கிளினிக் நெ.14, வெங்கடேஸ்வரா நகர், அறிஞர் அண்ணா பஸ்டாண்டு, மதுராந்தகம் -603306. ஆலோசனை நேரம் திங்கள் முதல் சனி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. அணுகலாம். தொடர்புக்கு : நீலவேணி 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
 

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்