பதிவு செய்யும் நோக்கத்துடன் எழுதி வைக்கப்பட்ட ஆவணங்களை எவ்வளவு காலத்திற்குள் சார் பதிவகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்?

                         

ஒரு கிரையப்பத்திரம்  ஒரு விடுதலைபத்திரம் ஒரு செட்டில்மென்ட் பத்திரம் ஒரு பாகப்பிரிவினை பத்திரம் ஒரு குடும்ப ஏற்பாடு ஏதோ ஒரு சொத்து கைமாறு வதற்காக பத்திரம் பேப்பர் வாங்கபட்டு பத்திரத்துக்கான ஷரத்துக்கள்  எல்லாம் எழுதி டைப் அடித்து பத்திரம் உருவாக்கி வைத்து விடுவார்கள்.

வாங்குபவருக்கோ விற்பவருக்கோ பத்திர ஆபிஸ்  முன்பு கருத்து வேறுபாடு வந்துவிடும்.பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் வந்துவிடும். அல்லது பத்திர ஆபிஸுக்கு வரும் வழியில் துக்க செய்தி வந்துவிடும் இப்படி பல காரணங்களால் பத்திர பதிவு தள்ளி போகும்.

அப்பொழுது தயார் செய்து வைத்த பத்திரங்களில் தேதி எல்லாம் டைப் அடித்தாயிற்றே என்று கவலைபட தேவையில்லை .மேற்படி ஆவணங்களை பதிவதற்கு 4 மாதம் அவகாசம் இருக்கிறது .

அதேபோல நீதிமன்ற தீர்ப்பு வந்த தீர்ப்பானது பத்திரப்பதிவு அலுவலகத்தில் வந்து பதிய வேண்டும் தீர்ப்பு வந்துவிடும் ஆனால் ஜட்ஜ்மெண்ட் காப்பி வருவதற்கு கால தாமதம் ஆகிவிடும் .அதே போல் நீதிமன்றம் மூலம் கிடைக்கும் விற்பனை சான்று (Sale Certificate) யும் தாமதமாக ஆகிவிடும்.இவையெல்லாம் உங்களுக்கு கிடைத்ததில் இருந்து நான்கு மாதங்களுக்குள் சார்பதிவகத்தில் பதிய வேண்டும்.

பத்திரங்களை பதிய கால அவகாசம் பத்திரம் தயார் செய்ததில் இருந்து நான்கு மாதமா? 120 நாளா அல்லது 120 வேலை நாட்களா? நீதிமன்றத்தில் உத்தரவு இட்டதில் இருந்து நான்கு மாதமா அல்லது மனுதாரர் கைக்கு கிடைத்ததில் இருந்து 4மாதமா 120 நாட்களா 120 வேலை நாடகளா என்று குழப்பங்கள் இருக்கின்றன.அந்த நேரங்களில் மாவட்ட பதிவாளர் வரிகாட்டுதல் நீதிமன்றம் தீர்ப்புகள் என்று பார்த்துகொள்ள வேண்டியதுதான்.

நமக்கு ஏன் நான்கு மாதம் இடம் உண்டு இல்லை என்று 1மாத கால அவகாசத்தில் முடித்துவிட்டு அடுத்த வேலை பார்க்க வேண்டியதுதான்.

இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்
தொழில் முனைவர்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்டநிலம் உங்கள் எதிர்காலம்புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#சார்பதிவகம் #பத்திரபதிவு #சொத்து #சர்வே #இனாம்கள் #மானியம் #உயில் #ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு #முத்திரைதாள் #பட்டா#கடன் #அடமானம் #mortage #பத்திரம்பதிவு #கிரயம் #பவர் #செட்டில்மெண்ட் #தானம் #கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம் #சுவாதீனம் #பாகபிரிவினை #உயில் #வாரிசுரிமை

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்