பத்திரங்களை தாக்கல் செய்வது தெரிய வேண்டிய செய்திகள்!!

  • ஒரு கிரயபத்திரத்தை எழுதி வாங்குபவர் பெரும்பாலும் தன்னுடைய சொந்த செலவில் கிரைய பாத்திரங்களை உருவாக்கி அதனை சார் பதிவகத்தில் பதிவு செய்ய தாக்கல் செய்வார்  தாக்கல் செய்பவரே பதிவு கட்டணம் முதல் கொண்டு அனைத்து செலவுகளையும் செய்வார்கள்.
  • அதே போல ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இடங்கள் வாங்கும்போது ரியல் எஸ்டேட் நிறுவனம் அனைத்து பத்திரங்களையும் தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு பத்திரம் பதிவு செய்ய சார்பதிவகத்தில் தாக்கல் செய்வார்கள்.பதிவு கட்டணம் உட்பட அனைத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டி விடும் (நிறுவனம் வாடுக்கையாளரிடம் வாங்கி விடுவார்கள் அது வேறு)
  • மேற்கண்ட இரண்டு விஷயத்திலும் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் ஒரு ஆவணத்தை எழுதிக் கொடுக்கிற அல்லது எழுதி வாங்குகிறார் எவராலும் பத்திர அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய சொல்லி தாக்கல் செய்யலாம்.
  • நேரடியாக தாக்கல் செய்யாமல் அதற்கும் அதிகாரம் (பவர்) கொடுக்கலாம்பெரும்பாலும் நிறைய மனைபிரிவுகளை விற்பனை செய்கின்ற  ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று சார்பதிவகத்தில் பதிவு செய்ய செல்லமுடியாத காரணத்தினால் தனக்காக சார்பதிவகத்தில் தாக்கல் செய்வதற்கு மட்டும் தாக்கல் பவர் ஒரு முகவருக்கு கொடுத்து விடுவார்.அவர்  நிறுவன உரிமையாளருக்காக தாக்கல் செய்வார்.
  • தாக்கல் செய்வது சார்பதிவாளரிடம் பத்திரத்தை தயார் செய்து பதிவுக்கு சமர்பிப்பது மட்டும் அல்ல! பதிவுகட்டணம் செலுத்துவது சார்பதிவக பதிவு ஆவணங்களில் கையுழுத்து இடுவது கைரேகை பதிப்பது போட்டோ பிடிப்பது என்று சின்ன சின்ன தொடர் வேலைகள் தாக்கல் செய்வதில் அடங்கும்.
  • தாக்கல் கொடுக்கப்படும் பவர் வேறு பொது அதிகார பத்திரம் வேறு இரண்டையும் போட்டு குழப்பி கொள்ள கூடாது. தாக்கல் பவர் ஒரு வகையில் சிறப்பு (பகுதி) அதிகார ஆவணமே!பொது அதிகாரத்தில் பவர் வாங்கியவர் சொத்தை விற்கலாம். தாக்கல் பவரில் உரிமையாளர் தான்  சொத்தை விற்கிறார் .தாக்கல் பவர் வாங்கியவர் சார்பதிவகத்தில் தனக்கு பதில் தோன்றுவதற்கும் அங்கு காரியங்கள் செய்வதற்கு தான் அந்த தாக்கல் பவரை பயன்படுத்தபடுகின்றனர்.
  • தாக்கல் பவர் கொடுத்த மனைபிரிவின் உரிமையாளர் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டிய மனைகளுக்கான கிரைய பத்திரத்திரத்தில் விற்பதற்கான இடங்களிலெல்லாம் கையெழுத்திட போட்டுவிடுவார் .இடம் வாங்க போகிறவரும் ரியல்எஸ்டேட் அலுவலகத்திலேயே அல்லது பத்திரம் தயார் செய்யும் அலுவலகத்திலேயே கையெழுத்தை கிரைய ஆவணத்தில் போட்டுவிடுவார்கள் .
  • மேற்படி பத்திரத்தை  சார் பதிவகத்தில் பந்தயத்தில் பதிவதற்கு பதியும்போது அந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் அதாவது அதில் எழுதி கொடுப்பவர் பத்திர அலுவலகத்திற்கு தோன்ற மாட்டார் .அதற்கு பதிலாக தன்னுடைய பிரதிநிதியாக தாக்கல் பவர்  ஏஜெண்டை அங்கு அனுப்பி வைப்பார் அவர்  கிரயம் எழுதி கொடுப்பவருக்கு பதிலாக சார் பதிவகத்தில் பத்திரத்தை தாக்கல் செய்வது பத்திரத்தில் ரேகை பதிப்பது பத்திரத்தில் புகைபடம்பிடிப்பது ரசீது போடுவது பத்திரத்தை திருப்பி வாங்குவது பத்திரத்தை திருப்பி வாங்க வேறு நபரை நியமிப்பது போன்ற வேலைகளை தாக்கல் பவர் பெற்றவர் செய்யலாம்.
  • தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் தாக்கல் செய்வதை வாங்குபவர் விற்பவர் அல்லது வாங்குபவரின் விற்பவரின் அதிகார முகவரும் அல்லது தாக்கலுக்கான அதிகாரம் பெற்றவரோ சார்பதிவகத்தில் மேற்சொன்ன வேலைகளை செய்யலாம்.
                                 

இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்
தொழில் முனைவர்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3


#ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு #முத்திரைதாள் #பட்டா#கடன் #அடமானம் #mortage #பத்திரம்பதிவு #கிரயம் #பவர் #செட்டில்மெண்ட் #தானம் #கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம் #சுவாதீனம் #பாகபிரிவினை #உயில் #வாரிசுரிமை #சொத்துரிமை #எதிர்மறைசுவாதீனம் #ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு #முத்திரைதாள் #பட்டா #சிட்டா #அடங்கல்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்