பாண்டிசேரி நிலங்களை ஒருங்கிணைத்த மூன்று பிரெஞ்சு தலைவர்கள்-Crash Course

 பாண்டிசேரி நிலங்களை ஒருங்கிணைத்த மூன்று பிரெஞ்சு தலைவர்கள்-Crash Course


ழா பெல்லான் என்ற பிரெஞ்சுகார் செஞ்சியில் அப்பொழுது ஆட்சியில் இருந்த சுல்தான்களின் கீல்லேதாரர் நசீர் கான் அவர்களின் அழைப்பிற்கு இணங்க இப்போதைய பாண்டிசேரியின் கடற்கரையோரம் சிறு பண்டகசாலை மற்றும் வணிக மையத்தை ஆரம்பித்து இருந்தார்.

அவரிடம் உதவியாளராக இருந்து பின்னால் பொறுப்பிற்கு வந்த பிரான்சுவா மார்ட்டின் என்ற பிரெஞ்சு தலைவர் இப்போது இருக்கும் பாண்டிசேரியை ஒயிட்டவுன் பிளாக் டவுனாக
இரண்டாக பிரித்து வடிவமைத்தார்.

இப்பொழுது இருக்கும் நீண்ட நேரான தெருக்கள் அகன்ற சாலைகள் முறையான கால்வாய் ஆகியவற்றை பிரான்சுவா மார்ட்டின்அமைத்தார்.அதே காலகட்டத்தில் சென்னையிலும் பிரிட்டிஷாரர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றி நகரை உருவாக்கினார்கள்.ஜார்ஜ் கோட்டை இருந்த பகுதி ஒயிட் டவுன் என்றும் அப்பொழுது அதனை சுற்றி இருந்த முதலியார் செட்டியார் பிராமணர் குடியிருப்புகளை பிளாக் டவுன் என்றும் அழைத்தார்கள். இன்றும் அந்த பிளாக்டவுனை ஜார்ஜ் டவுன் என்று சொல்கிறோம்.

பிரான்சுவா மாரட்டின் அவர்கள் இப்பொழுது பூங்காவாக இருக்கும் இடத்தில் தான் அப்போதைய செயின்ட் லூயிஸ் கோட்டையை எழுப்பி இருந்தார் பிரான்சுவா மார்ட்டின்,பிற்காலத்தில் பிரிட்டிஷகாரர்கள் கோட்டையை தகர்த்ததுடன் புதிய கோட்டையையும் கட்டகூடாது என்று ஒப்பந்தம் போட்டுகொண்டனர்.மேலும் பிரிட்டிஷாருக்கு இந்த பாண்டிசேரி ஒயிட் டவுன் லேசான பொறாமை இருந்தது. இந்நகரை இப்படி உருவாக்கி இருக்கிறார்கள் பிரெஞ்சுகாரர்கள் என்று மனசாட்சி உலுக்கியதாலேயே திருப்பி கொடுத்துவிட்டனர்.

அன்றைய பாண்டிசேரியில் இன்றைய ஒழுகரை கருவடிகுப்பம் காலாபேட் உட்பட சில கிராமங்கள் இல்லை. அதனை பிற்காலத்தில் பிரான்சுவா மார்ட்டின் சென்னையில் இருக்கின்ற பாரசீக சௌபா (இப்பொழுது அமீர்மஹாலில் இருக்கின்ற குடும்பம்) தாவுத்கானிடம் தங்க பகோடாக்காளாக (ஒரு பகோடா என்பது 3,.5 கிராம் தங்க நாணயம்)ஆயிரகணக்கான பொற்பணம் கொடுத்து வாங்கி பாண்டிசேரியோடு இணைத்தார்கள். ஆக பிரான்சுவா மார்ட்டின் தான் நகரை நிர்மாணித்தவர் இவருக்கு பிறகு வந்த தூய்மா என்ற அடுத்த பிரெஞ்சு தலைவர் தஞ்சை பகுதியில் அரசலாற்றங்கரையில் இருக்கின்ற காரைகால் பகுதியை அன்றைய தஞ்சை மாராத்திய அரசர் சாக்கோஜுயிடம் இருந்து ஆயிரகணக்கான தங்க பகோடா கொடுத்து விலைக்கு வாங்கி பாண்டிசேரியோடு இணைத்தார். இதனை விரும்பாத அங்கிருக்கும் முசுலீம் தளபதி பிரெஞ்சுகாரர்களிடம் சண்டையிட்டு காரைகாலை கொடுக்கவில்லை. அதன்பிறகு சிலபல பேச்சுவார்தை மற்றும் இரண்டாவதுது payment ற்கு பிறகு காரைகால் பிரெஞ்சு வசமானது

மேலே சொன்னா தூய்மாவிற்கு பிறகு வந்த மார்கஸ் டூப்ளே இந்தியாவையே பிரெஞ்சு ஆட்சியின் கீழ் கொண்டு வர ஆசைபட்டார். வெறும் வணிக நிறுவனமாக இருந்த பிரெஞ்சு கிழக்கு இந்திய கம்பெனி உள்நாட்டு அரசியலில் தலையிடும் ஒரு இந்திய நாடாக விளங்கியது.

பிரெஞ்சு கவர்னர் என்று மட்டும் இல்லாமல் ஆற்காடு நவாபு அரசில் தளவாயாக போறுப்பேற்று கொண்டு தெற்கே காவிரி ஆற்றின் வடபுரம் முதல் வடக்கே கிருஷணா நதியின் தென் புறம் வரை ஒரு பெரிய இராஜங்கத்திற்கு தளகர்த்தர் ஆனார்.

அந்த நேரத்தில்தான் இப்பொழுது பாண்டிசேரியில் இருக்கிற பாகூர் கொம்யூனை வில்லியனூர் கொம்யூன் வழுதாவூர் ஜாகிரை பெற்றுகொண்டு பாண்டிசேரியில் இணைத்தார். மேலும் காரைகாலை சுற்றியுள்ள 85 கிராமங்களை தஞ்சை மராத்தி அரசிடம் போரில் உதவி செய்ததற்காக அன்பளிப்பாக பெற்று கொண்டு காரைகாலுக்குள் இணைத்து கொண்டார்.

பிரான்சுவா மார்ட்டின், துய்மா போன்றோர் கிராமங்களை பணம் கொடுத்து வாங்கினார்கள்.டூப்ளே மட்டும் தான் ஆற்காடு நாட்டுக்கு தளபதியாக இருந்து கொண்டு இராஜதந்திர நடவடிக்கைகள் மேலம் கிரமாங்களை பெற்றுகொண்டார்.

டூப்ளேக்கு அதிர்ஷடம் இருந்திருந்தால் இந்தியாவில் ஆங்கில பேராதிக்கம் நிலை நிறுத்துவதற்கு பதில் பிரெஞ்சு பேராதிக்கம் நிலை நிறுத்தபட்டு இருக்கும்.

ஒரு முறை சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை பிரிட்டிஷாரிடம் இருந்து டூபளேக்கு கீழ் இருந்த பிரெஞ்சு தளபதி கைபற்றிவிட்டார்.ஆனால் பெரும் பணம் பெற்று கொண்டு பிரிட்டிஷ்காரரிடமே கொடுத்துவிட்டு பிரான்சு சென்றுவிட்டார்.அப்பொழுது இந்தியாவை தன் ஆளுகைக்குள் கொண்டுவந்த பிரிட்டிஷ் இராபர்ட் கிளைவ் ஒரு சாதாரண வீரனாக கிளார்க்காக ஜார்ஜ் கோட்டையில் பணியாற்றி கொண்டு இருந்தார்

அதன்பிறகு டூப்ளே தன் கீழ் இருந்த எந்த தளபதியையும் முழுமையாக நம்ப முடியாமல் போய்விட்டது.டூப்ளேயின் ஒரே பக்க துணை அவரின் வீட்டம்மா மட்டும்தான் ஜெனி டூப்ளக்கஸ் அந்த அம்மாவுக்கு டூப்ளேவுக்கு முன் திருமணம்  நடந்து அதற்குமுன் இருந்த கணவன் மூலமாக ஆறேழு குழந்தைகள் இருந்தன.

அதில் கடைசி பெண்குழந்தையை கல்யாணம் செய்து கொண்டவர் தான் மாவீரன் புஸ்ஸி!ஏறக்குறைய டூப்ளேக்கு மருமகன் வேண்டும்.புஸ்ஸி தான் பிரிட்டிஷாரை எதிர்த்து நடந்த பல போர்களுக்கு தளபதியாக செயல்பட்டார். பிரிட்டிஷ் இராபர்ட் கிளைவிற்கு ஒரு வகையில் ரோல் மாடல்

இப்படி பிரிட்டிஷ் பிரெஞ்சு மோதல் கர்நாடகா போர் என்று இருந்த காலத்தில் லாலி தொலிந்தால் என்ற தளபதி ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் இந்தியாவில் இருக்க கூடாது என்று வெறுப்போடும் வெறியோடும் வந்து பிரிட்டிஷாரிடம் சண்டையிட்டு முற்றும் முதலுமாய் தோற்று போய் பிரான்சு திரும்பி பிரான்சு அரசாலேயே இராஜதுரோக செயலுக்கு தூக்கிலிடபட்டான்.இந்தியா முழுவதும் பிரிட்டிஷ் வசமாகிவிட்டது

அதன்பிறகு பிரிட்டிஷ் அரசு பிரான்சை ஒரு வணிக நிறுவனமாக மட்டும் இந்தியாவில் இருந்து கொள்ள அனுமதித்தது.பிரான்சும் பிரிட்டிஷ் எதிர்ப்பை கைவிட்டு ஆங்கிலோ பிரெஞ்சு (anglo french partnership) கூட்டு வியாபரத்தை ஆரம்பித்தன.

இப்படி பாண்டிசேரியை உருவாக்கிய பிரெஞ்சு தளகர்த்தர்களான பிரான்சுவா மார்ட்டின் துய்மா லாலி புஸ்ஸி போன்றவர்கள் பெயர்கள் எல்லாம் இன்றைய பாண்டிசேரி ஒயிட் டவுனில்
தெருக்கள் பெயராக இருக்கிறது.

#anglo #french #Pondichery #duplex #karaikal #whitetown #blacktown

இப்படிக்கு,

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
www.paranjothipandian.in

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்