நில பிரச்சினையை படமாகவே வரைந்துவிட்டார்கள்!!!

 நில பிரச்சினையை படமாகவே வரைந்துவிட்டார்கள்!!!



தேனி மாவட்டத்தில் ஒரு பங்காளிகளுக்குள் நில சிக்கல் பாகம் பிரிவினை செய்யாமல் பல வருடங்களாக தனிதனியாக நின்று அனுபவித்து வருகிறார்கள்.யுடிஆரில் ஒரு பங்காளி பெயர் மட்டும் ஏறிவிட்டது அந்த வாய்ப்பை பயன்படுத்தி பல கிரய பத்திரங்களை உருவாக்கி விட்டனர் பொது பாத்தியதை வழி நீர்கால் எல்லாம் இப்பொழுது உரிமை இல்லை என்று தடுக்கின்றனர். இந்த சிக்கலை சரி செய்ய முடிவெடுத்த படத்தில் உள்ள சகோதரி எல்லா நில ஆவணங்களையும் ஆராய தொடங்கிய பிறகுதான் பங்காளிகள் நன்றாக பேசிகொண்டே இப்படி இரகசியமாக நிறைய தில்லுமுல்லுகள் பத்திரங்களில் செய்து இருக்கிறார்கள் என்று தெரிய வந்து இருக்கிறது. இந்த பிரச்சினை வருவதற்கு முன் சர்வே எண் என்றால் என்னவென்றே தெரியாது சகோதரிக்கு அதன்பிறகு யூடியூப் சேனல் புத்தகம் வக்கீல் என்று பலவகையில் நிலங்களை அதன்அடிப்படைகளை கற்று கொண்டு இருக்கிறார். அவரின் எதிர்மனுதாரர் உருவாக்கிய அனைத்து பத்திரங்களின் சொத்துவிவரங்களையும் தனி தனி வரைபடமாக ஒரே பிளானில் வரைந்து ஒவ்வொரு பத்திரத்தில் நடந்த தில்லுமுல்லுகளை தனிதனியாக வரைபடமாக வரைந்து இருந்தார்.

இதுவரை நிலசிக்கல் என்று ஆலோசனைக்காக வருபவர்கள் ஆவணங்களை அப்படியே கொடுத்துவிடுவார்கள் அதனை ஆழமாக படித்து புரிந்து கொள்ளவே அதிக நேரம் எடுக்கும்.சில நேரங்களில் முழு இரவும் எடுத்துகொள்ளும்.ஒரு சிலருக்கு பிரச்சினையை சொல்லவே தெரியாது நாம் தான் பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக நூல்பிடித்து் செல்ல வேண்டும்.

ஆனால் இந்த சகோதரி எளிதில் புரியும் விதமாக வரைபடமே போட்டுவிட்டார். ஐந்து நிமிடத்தில் ஐம்பதாண்டு கால சிக்கல்கள் புரிந்துவிட்டது. அட் என்று கண்களும் ஆச்சரியத்தில் விரிந்து விட்டது.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
www.paranjothipandian.in

#நிலசிக்கல் #வழக்கு #நீதிமன்றம்
#theni #map #land #consultant

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்