பூமியை அளந்த கதைகள்

 




பூமியை அளந்த கதைகள்:

தன் கோலால் உலகின் சுற்றளவை அளந்த எரஸ்தோனிஸ்-

இன்று நிலத்தை சர்வே செய்வதை மிக எளிதாக பல்வேறு நவீன கருவிகள் வைத்து செய்து விடுகிறோம். இனி வரும் காலங்களிலும்  பல விதமான அதிநுட்ப கருவிகள் வந்து விடும். அதை வைத்து சூரிய குடும்பத்தை பால்வெளி மண்டலத்தை கூட அளந்து விடுவார்கள் எதிர்கால தலைமுறையினர்

ஆனால் கி.மு.200 களில் பண்டைய கிரேக்கத்தில் நைல் நதி நாகரீகத்தில் அலெக்சாண்டிரியா மாநகரின் பெரும் நூலகத்தின் நூலகர் எரஸ்தோனிஸ், கணிதவியலாளர், அவருக்கு முன்பே பண்டைய கிரேக்கத்தில் சாக்ரடீஸ், பிளாட்டோ, பித்தாகரஸ், ஹிப்பாகிரிட்டிஸ் என்று மூளை வலிமைகள் பெருத்தவர்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் பூமி உருண்டையானது தட்டையானது அல்ல என்பதை உறுதி செய்துவிட்டு சென்று விட்டார்கள் என்று எரஸ்தோனிஸ் புரிந்து வைத்து இருந்தார்.

இந்த நூலகர் அலெச்சாண்டிரியா என்ற அவரது நூலகம் இருக்கும் ஊரில் ஒரு காலி மனையில் ஐந்தடி உயர கோலை சரியாக 12 மணி வெயிலில் நட்டு வைத்து வெயில் கோலின் தலையில் பட்டு கீழே விழும் கொம்பின் நிழலை அளந்து ஒரு முக்கோணத்தை உருவாக்கினார்.

அதாவது சூரியான் கொம்பின் உச்சியில் விழுந்து கீழே மேற்கு பக்கமாக கொம்பின் நிழலின் நீளத்தை அளந்து முக்கோணத்தின் அடிபக்கமாக குறித்து கொண்டார். நேராக நிற்கும் கொம்பை 90 டிகிரி உள்ள எதிர்பக்கமாக குறித்து கொண்டார்.

பூமியின் மீது படுக்கையாக விழுந்த கொம்பின்நிழலின் உச்சி இருந்த இடத்தில் சிறிய ஆணியை அடித்து உண்மையான கொம்பின் உச்சியில் ஒரு பொடி ஆணியை அடித்து இரண்டு ஆணிக்கும் இடையில் நூலை கட்டி முக்கோணத்தின் ஹைபாடினியூஸ் கர்ணத்தை உருவாக்கினார்.

இந்த முக்கோணத்தை கணக்கிட்டு மூன்று கோணங்களை கணக்கிட்டு விட்டார் நம்ம நூலகர். கொம்பு செங்குத்தாக நிற்பதால் கொம்பிற்கும் பூமியிலர விழுந்த கொம்பின் நிழலிற்கும் 90 டிகரி தரையில் இருக்கிற ஆணிக்கும் கொம்பில் இருக்கும் ஆணிக்கும் கட்டபட்ட நூலின் ஹைபாடினயூஸ் ஆக கொண்டுள்ளதால் ஹைபாடினியூஸ்ற்கும் கொம்பின் நிழலுக்குமான கோணம் 82.8 டிகிரி என்று வருகிறது. அதேபோல் கொம்பின் தலை உச்சக்கும் ஹைபாடனயூஸ்க்கும் உள்ள கோணம் 7.2 டிகிரி வருகிறது

இதே போல நைல் நதிக்கரையோரம் இருக்கின்ற இன்னொரு பக்கத்து ஊரான சயீன் என்ற ஊரிலும் இதே போல கொம்பை வைத்து மதியம் 12மணிக்கு பரிசோதித்த பொழுது கொம்பில் இருந்து நிழலே விழவில்லை.அப்படியானால் சூரியனின் கதிர் நேராக 90 டிகிரியில் கொம்பும் 90 டிகிரியல் விழுகிறது என்று புரிந்து கொண்டார். அதனால் நிழல் விழவில்லை முக்கோணம் உருவாக்க வில்லை.

இப்படி நாட்டின் பல பகுதிகளில் சென்று கொம்பை வைத்து சூரிய கதிர்கள் படுமாறு வைத்து நீழல்கள் விழுவதை கோணங்கள் எடுக்க ஆரம்பித்து கணக்கிட்டு பூமியான் சுற்றளவு சராசரியாக நாற்பதாயிரம் கிலோ மீட்டர் என்று கணக்கிட்டு சொல்லிவிட்டார்.

எப்படி கணக்கிட்டார் என்பதின் சத்தியத்தை இப்பொழுது பார்பரபோம். ஒரு சமதளபரப்பில் சூரிய கதிர் விழுந்தால் 90 டிரியில் தான் விழும்  ஆனால் நமது பூமி கோளம் அல்லவா? அப்படியானால் அதனுடைய மேற்பரப்பு ஒரு வில் போல வைந்து தான் இருக்கும் என்ற உண்மையை உணர்ந்து கொண்டார். அப்படியானல் வில் வடிவ மேற்பரப்பில் சூரிய கதிர் விழும் பொழுது இடத்திற்கு இடம் வேறு வேறு கோணங்களில் தான் கதிர் விழும் அதன் அடிப்படையில் தான் கொம்பின் நிழலின் கோணமும் நீளமும் மாறுபடும் என்பதை புரிந்து கொண்டார்.

மேலும் ஒரு கோளத்தின் அல்லது வட்டத்தை  360 டிகிரியாக கொள்ளலாம். அதேபோல் கோளத்தின் சுற்றளவின் உள்ள இரண்டு வேறு வேறு பாயிண்டுகளை அடையாளப்படுத்த கோளத்தின் மைய பள்ளியில் இருந்து எத்தனை கோணத்தில் இரு புள்ளிகளும் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அதாவது கோளத்தின் சுற்றளவு  பரிதியில் உள்ள இரண்டு பாயிண்டுகளின் தூரமும் அந்த இரண்டு பாயிண்டுகளுக்கு உள்ள ஏதாவது ஒரு கோணம் தெரிந்தால் கூட அதனை வைத்து மொத்த கோளத்தின் சுற்றளவு பரப்பு என அனைத்தையும் கண்டுபிடித்து விட முடியும். இதனை கோள முக்கோண முக்கோணவியல் (Spherical Trigonometry)என்பார்கள்.

அலெக்சாண்டிரியாவிலும் சயின் என்ற ஊரிலும் கொம்பை வைத்து சூரிய கதிர் மற்றும் நிழல் பரிசோதனை செய்து இருந்ததில் சயினில் 90 டிகிரிநேர்கோட்டில் கொம்பின் மேல் விழுகின்ற சூரிய கதிர் அதே அலெக்சாண்டிரியாவில்  கொம்பின் மீது 7.2 டிகிரி கோணத்தில் சாய்வாக சூரிய கதிர் விழுவது தெரிந்தது. மேலும் சயீனுக்கும் அலெக்சாண்டிரியாவுக்கும் உள்ள தூரம் 800கி மீட்டர் ஆகும்.

இந்த கணித விவரங்களை வைத்து 360டிகிரியை 7.2 டிகிரியால் வகுத்தால் 50 என்று வரும் அதாவது 7.2 டிகிரி ஒரு கோளத்தின் வெட்டு துண்டு என்றால் 50 வெட்டு துண்டுகள் வந்தால் கோளத்தின் மொத்த டிகிரியான 360 டிகிரி கிடைத்து விடும். அதேபோல் அலெக்சாண்டிரியாவில் இருந்து சயீனுக்கு 800 கி மீட்டர் என்றால் உள்ள பூமி என்ற கோளத்தின் பெரிய வெட்டு துண்டு என்றால் அதேபோல் 50 பங்குகள் வந்தால் பூமி கோளத்தின் மொத்த சுற்றளவான(பரிதி) 40,000 கி மீட்டர் என்ற விடை கிடைக்கும்.

இன்றைய நவீன கருவிகள் வைத்து கூட பூமியன் சுற்றளவை 40000கி மீட்டர் என்று தான் இன்றைய அறிஞர்கள் கணக்கிட்டு உள்ளார்கள். ஆனால் நம்ம தெரொஸ்தொனிஸ்  2200 ஆண்டுகளக்கு முன்பு ஒரு கோலை வைத்து இரண்டு இடைவெளியுள்ள ஊர்களுக்கு மட்டும் பயணபட்டு மொத்த உலகத்தின் சுற்றளவை கணக்கிட்டு விட்டார்

அது மட்டும் இல்லாமல் உலகத்தில் உள்ள நாடுகளின் ஒருங்கிணைத்து ஒரு வரைபடமும் தந்து இருக்கிறார் அந்தமேப்பில் அமெரிக்க கண்டத்தை காணோம் இந்தியாவை தீபகற்பமாக கூம்பு போல காட்டாமல் வெறுமனே சதுரமாக காட்டி இருக்கிறார். இவருக்கு முன் இருந்த கிரேக்க அறிஞர்கள் தயாரித்த மேப்களில் இந்தியாவே இருக்காது. அலெக்சாண்டர் படையெடுப்பிற்கு பிறகுதான் இந்தியா போன்ற பெரிய நாடுகள் இருப்பது தெரிந்தது.

இவரை உலகத்தை சர்வே செய்த முதல் முன்னோடிகளில் ஒருவாராக சேர்த்து கொள்ளலாம்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில் முனைவர்

9841665836.

#story #paranjothi_pandian #author #writer #trainer #consulting #maths #world #survey  #சர்வே #கிரேக்க #earth #பூமி #Circumference #india #tools #circle #square #triangle #meter #cent #square_feet

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்