செட்டியாரும் முறுக்கு! சரக்கும் முறுக்கு!

 

செட்டியாரும் முறுக்கு!  சரக்கும் முறுக்கு!

பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் பசுமையான மலையடிவாரத்தின் கீழ் சின்ன வெங்காயம் விளையும் பள்ளத்தாக்கில் விளம்பரமில்லாத அழகு பிரதேசத்தில் எனக்கான ஆசான்களில் ஒருவரான ஸ்ரீமான் தங்கமாமுனி அவர்களை சந்தித்தேன்.

நின்னு நிதானாமாக நேரம் செலவழித்து நிறைய நேரம் பேசி அவரிடம் இருந்து நிறைய கற்றுகொள்ள வேண்டும் என்று சொன்னாலும் வாடிக்கையாளர் களபணியின் ஊடே சந்தித்ததால் கற்று கொள்ள முடியாமல் கிளம்பிவிட்டேன். இப்பொழுதுதான் என் ஆசான் கடைவிரித்து இருக்கிறார்! கொள்வாருண்டா தெரியவில்லை! இனிதான் பார்க்க வேண்டும்! என் தொழில் முனைவு பயணத்தில் புரிந்து கொண்டது என்னவென்றால் "செட்டியாரும் முறுக்கு! சரக்கும் முறுக்கு!  என்று சொல்வார்கள். அதாவது விற்கப்படுகிற  சரக்கும் நல்லா இருக்க வேண்டும்! விற்கின்ற செட்டியாரின் மார்க்கெட்டிங் பேச்சும் நல்லா இருக்க வேண்டும் அப்பொழுதுதான் பொருள் மக்களிடம் போய் சேரும்! ஆசானின் சரக்கு முறுக்குதான். ஆனால் அது அறிவு வசப்பட்டது ... செட்டியார் முறுக்கா என்பது மனிதர்களின் உணர்ச்சி சம்மந்தபட்டது, சாதாரண மனிதர்களின் உணர்ச்சி அறிவை ஜெயித்துவிடும், ஆனால் நல்ல விலை உழைப்பாலும், பொருளாலும் கொடுத்து வளர்ச்சி பரிமாணத்தை உயர்த்துவார்கள். தலைமைபண்புடையோர், அறிவை முன்னிருத்தும் மக்கள்,  சரியான  விலை கொடுக்காமல்  தான் போக வேண்டும் என்று வளர்ச்சிபரிணாமத்தை முடிந்தவரை உடைப்பார்கள் ! ஸ்ரீமான் தங்கமாமுனி அய்யா அவர்கள் பார்த்து கொள்ள வேண்டும்.

 

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில்முனைவர்

9841665836

#story #paranjothi_pandian #author #writer #trainer #consulting #perampalur #srimanthangamamuni#செட்டியார் #முறுக்கு #labour #things #price#dimension#leadership #knowledge #people #fieldwork#

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்