முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 19-வது பாகம்)
சந்தை மதிப்பு(MARKET VALUE), வழிகாட்டி மதிப்பு (GUIDE LINE VALUE )சந்தை மதிப்பு வழிகாட்டி (MARKET VALUE GUIDE LINE) யின் பரிணாம வளர்ச்சி வரலாறு
பதிவுத்துறையில் பொது மக்கள் பத்திரங்கள் பதியும் பொழுது அரசு நிர்ணயத்துள்ள வழிகாட்டி மதிப்பின்படி தான் முத்திரைத்தாள் வாங்கி சொத்துக்களை பதிவார்கள். அதற்கு ஏற்றவாறு பதிவு கட்டணங்களையும் செலுத்துவார்கள். இந்த வழிகாட்டி மதிப்பு குறித்து காலம் காலமாக பொதுமக்களுக்கும், பதிவு துறைக்கும் முரண்பாடுகளும், சிக்கல்களும் இருந்து கொண்டே வருகிறது.
மேலும் “ வழிகாட்டி மதிப்பு “ என்ற சொல்லும், “ சந்தை மதிப்பு “ என்ற சொல்லாடலும் சந்தை மதிப்பு வழிகாட்டி என்ற எந்த சொல்லும் இன்று வரை சாமானியர்கள் காதில் விழுந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அவற்றைப் பற்றிய விபரங்கள் புரியாமல் தள்ளி நின்றே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் சாமானிய பொது மக்கள்! அவர்களுக்கு இதனை பற்றி பாமரத்தனமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று இதனை எழுதுகிறேன்.
உண்மையில் 1968 ஆம் ஆண்டுக்கு முன்பு ‘ திராவிட மாடல் உருவாவதற்கு முன்பு வழிகாட்டி மதிப்பும் இல்லை! சந்தை மதிப்பும் இல்லை! எந்தெந்த மதிப்பு காட்டி பத்திரம் பதிவு செய்கிறார்களோ! அந்த மதிப்புக்கு மட்டுமே முத்திரை தீர்வு கட்டி பொதுமக்கள் பதிந்தார்கள். அப்போதெல்லாம் மக்கள் காட்டுவது தான் கிரைய மதிப்பு அந்த கிரைய மதிப்பிற்குத் தான் முத்திரைத்தாள் வாங்கி பதிந்து வந்தார்கள்.
அதே போல் மக்கள் கிரைய மதிப்பை தாண்டி வழிகாட்டி மதிப்பு முதலில் அறிய அறிமுகமானதா? என்றால் சந்தை மதிப்பு முதலில் அறிமுகமானதா? அல்லது சந்தை மதிப்பு தான் முதலில் அறிமுகமானது என்றால் முத்திரை சட்டத்தில் 24/1967 என்கிற புதிய சட்டம் போட்டு 47A என்ற பிரிவு நுழைக்கப்பட்டது அதன் பிறகு சந்தை மதிப்பு கூடுதல், குறைவு என்று பொதுமக்களுக்கும் பதிவு துறைக்கும் சர்ச்சை ஏற்படும் அப்பொழுது அதற்கு தனியாக மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனி துணை ஆட்சியர் ( முத்திரை ) ஆகியோரிடம் பதிவு செய்த பத்திரம் அனுப்பப்பட்டு சரியான மதிப்பு நிர்ணயம் செய்து இறுதி ஆணை வழங்கப்படுகிறது.
நாளை தொடரும்....
இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
www.paranjothipandian.com
Comments
Post a Comment