முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! 

(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 20-வது பாகம்)

இதுபோன்ற நேர்வுகளில் சம்பந்தப்பட்ட பொது மக்களின் பத்திரம் உடனடியாக திரும்ப பெற வாய்ப்பிலாமல் தாமதம் ஏற்படுகிறது. இப்படி அடிக்கடி பொதுமக்களுக்கும் அரசுக்கும் சந்தை மதிப்பு அதிகம், குறைவு என முரண்பாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்ததால் அரசாணை 589/வருவாய்/23.02.1971 யின் படி நேர்மையான முறையில் தமிழ்நாடு முழுவதும் “ Guide Line “ Value  (வழிகாட்டி மதிப்பு) என்ற சொல்லாடல் நுழைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வழிகாட்டி பதிவேடு உருவாக்கும் பணி முடிக்கப்பட்டது.

அதன் பிறகு தகுந்த கால இடைவெளிகளில் பதிவுத்துறை தனியார் வழிகாட்டி மதிப்பை மறுப்பார்வை ( Review ) செய்ய வேண்டும் என்று முதல் ரிவிசன் 1971இல் ஆரம்பிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைபடுத்தி தமிழ்நாடு முழுவதும் 01.09.1981 தேதி ( 132 CT & RE 12.02.1980 ) நடைமுறைக்கு வந்தது.

அதன் பிறகு அடுத்த 5 ஆண்டு இடைவெளியில் G.O.M.S 161 CTERE ) 13.02.1986 யில் ரிவிசன் செய்யப்பட்டு அடுத்து 3வது ரிவியூ 2வது ஆண்டுகளுக்கு இடைவெளியில் 387 CT & RE  26.05.1989 இல் செய்யப்பட்டது. நாலாவது ரிவிசன் 01.04.1991 யில் ஐந்தாவது ரிவிஷன் 01.04.1992 அன்று 6வது ரிவிசன் 01.04.1993 அன்று ஏழாவது ரிவிசன் 01.04.1994 அன்றும் எட்டாவது ரிவிஷன் 01.04.1995 அன்று ஒன்பதாவது 01.04.1996 என்றும் பத்தாவது ரிவிசன் 01.04.1997 அன்றும் 11-வது ரிவிசன் 01.04.1997 ஆண்டிலும் செய்யப்பட்டது. 12,13,14,15,16 ரிவிஷன்கள் முறையே 1999, 2000, 2001, 2002, 2003, 2004 ரிவிசன் செய்து கொண்டே இருக்கிறார்கள். இப்படி ஆண்டுதோறும் ரிவிசன் செய்யப்பட்டதில் பொதுமக்களின் பங்கு மிகவும் குறைவு பொதுமக்களும் அப்பொழுது அதில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. அதனால் எல்லா ரிவிசன்களும் (UPWARD REVISION) அல்லது மதிப்பு ஏற்றுவதாக இருந்தது. 

     களப்பணி செய்து குறைவாகவும் மெனக்கெடாமலும் இடத்திற்கு ஏற்றார் போல் இல்லாமல் பொதுவாக சதவீத கணக்குப்படி உயர்த்திக்கொண்டே இருந்தார்கள். இப்படி ஆண்டுதோறும் ரிவிசன் போட்டு வழிகாட்டி மதிப்பை உயர்த்திக்கொண்டே இருந்ததால் பொது ஜனங்கள் நீதிமன்றம் நாடி வழிகாட்டி மதிப்பிற்கு எதிராக  ரிட் வழக்குகளை போட ஆரம்பித்தனர்.

நாளை தொடரும்....



இப்படிக்கு, 

சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,

நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.

புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA

9841665836

www.paranjothipandian.com

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…