முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 21-வது பாகம்)
இந்திய முத்திரை சட்டத்தில் சந்தை மதிப்பு என்பது அரசியல் அமைப்புக்கு எதிரானது சொத்து பரிமாற்ற சட்ட புரிதல் உள்ள கிரைய மதிப்பு மாறாக உள்ளது என்றனர். அதனை தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டில் சட்ட போராட்டம் செய்து அப்படி இல்லை என்று 47A பிரிவில் உள்ள சந்தை மதிப்பை காப்பாற்றியது. (W.P.No.2563/1997, 529/1971, 1383/1971, W.A.No.47, 48 & 49/1979 ) இப்படி “சந்தை மதிப்பு“ என்கிற சொல்லாடலுக்கு வந்த சோதனையை பதிவுத்துறை சிரமப்பட்டு காப்பாற்றியது.
அதேபோல் “வழிகாட்டி மதிப்பு “ என்று ஆண்டுதோறும் உயர்த்தி வருவது அந்த காலகட்டத்தில் பத்திரிக்கையில் பள்ளிகூட மாணவர்களுக்கு ரிசல்ட் வருவது போல GUIDELINE VALUE வந்து கொண்டிருந்தது. ஆனால் இந்த வழிகாட்டி மதிப்பு “Guide Line Value” என்கிற சொல்லாடல் பதிவு சட்டம் முத்திரைச் சட்டம் உட்பட எந்த சட்டத்திலும் இல்லை அது முத்திரை சட்ட விதிகளில் “Tamil Nadu Stamp Prevention of undervalue of instrument Rule 1968” என்கிற விதிகளின்படி “வழிகாட்டி மதிப்பு பதிவேடு” சொல்லாடல் உள்ளது மேற்படி வழிகாட்டி மதிப்பை அந்தந்த பகுதியில் வளர்ச்சி, விற்பனை புள்ளி விவரம், நேரடி கள ஆய்வின் மூலமாக விசாரித்து முடிவு செய்யவும், முரண்பாடுகளை (anomalies) Guide Line Value என்று ஒன்று வைத்துக்கொண்டு பதிவு துறையின் வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்துக் கொண்டிருந்தனர். பொதுமக்கள் (Market Value) சந்தை மதிப்பு என்பது வேறு வழிகாட்டி மதிப்பு என்பது வேறு என்ற 2000 ஆண்டுகளில் புரிந்து வைத்திருந்தனர். மார்க்கெட் மதிப்பு பெரும்பாலும் அதிகமாக இருக்கும் வழிகாட்டி மதிப்பு அதனை விட குறைவாக இருக்கும். சில நேரங்களில் வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருக்கும், சந்தை மதிப்பு குறைவாக இருக்கும். அதேபோல் இரண்டும் தனித்தனி மதிப்பாகத் தான் இருக்கும். என்ற புரிதல் கொண்டனர். அதன் பின் ஏற்றத்தாழ்வாகத்தான் வழிகாட்டி மதிப்பும், சந்தை மதிப்பும் இருந்தது. இதனை களையவேண்டும். இரண்டு மதிப்பு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று பதிவுத்துறை முடிவு எடுத்தது. (அரசாணை எண் 67 வணிகவரி துறை நாள்:08.06.2005 யின் படி செயல்படுத்தியது)
நாளை தொடரும்....
இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
www.paranjothipandian.com
Comments
Post a Comment