முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 22-வது பாகம்)
இதில் மைய மதிப்பீட்டுக் குழு பதிவுத்துறை தலைவர் தலைமையிலும் வருவாய்த்துறை, பதிவுத்துறை, உள்ளாட்சி அமைப்புகளை வைத்து மாவட்ட குழு, வட்டாரக்குழு எல்லாம் போட்டு வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்தார்கள். 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் எல்லாம் வழிகாட்டி மதிப்பு என்பது கிராமங்களில் சர்வே எண் வாரியாகவும் நகரங்களில் தெரு வாரியாகவும் தரம் பிரித்து வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்து இருந்தார்கள்.
2005 ஆம் ஆண்டு தான் தெரு சர்வே எண் ஆகிய இரண்டு தரம் தாண்டி வகைபாடுகள் என்ற புதிய பிரிவுகளை ஏற்படுத்தி அதன் படி வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தார்கள் அதன் படி பாசன ஆதாரங்களை பொறுத்து 13 வகை பாடாகவும், மனையிடங்களை குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை அடிப்படையில் 12 வகைபாடுகளையும் உருவாக்கி அதன் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்தார்கள்.
இது மட்டும் இல்லாமல் 2005 ஆம் ஆண்டு தான் வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பதற்காக பொது மக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டது ஆக 2005 ஆம் ஆண்டு தான் “வழிகாட்டி மதிப்பை” பொறுத்த வரை ஒரு முழுமையான வடிவத்திற்கு வந்தது.
2005-ல் தான் வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்போடு ஒத்து இருக்க வேண்டும் எனவும், மாவட்ட குழு, வட்ட குழு போட்டு வழிகாட்டிகளை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் வகைபாடுகள் வாரியாக வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்க வேண்டும் எனவும், பொது மக்கள் கருத்து கேட்க வேண்டும் என்று ஒரு நல்ல நடைமுறை 2005-ல் தான் உருவானது.
இப்படி 2005 மக்களின் கருத்தை பெற்று உருவான வழிகாட்டி மதிப்பை நீதி மன்றம் சட்ட அந்தஸ்து இல்லாதது, அது புனிதமானது அல்ல (W.P.NO-4387 OF 2003) என்றெல்லாம் ஏற்கனவே சொல்லி விட்டது.
நாளை தொடரும்....
இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
www.paranjothipandian.com
Comments
Post a Comment