முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 25-வது பாகம்)
அப்படி நிர்ணயிக்கும்பொழுது தமிழகம் முழுவதும் அதுவரை இருந்த உயர் மதிப்புகளை விட பன்மடங்கு அதிகரித்து விட்டார்கள். இப்பொழுது சமூக ஊடகங்கள் அதிக அளவில் இருக்கிறது அப்பொழுது அப்படி இல்லை. பொது மக்கள் கருத்து கேட்டு அப்போது அவசர அவசரமாக நடந்தது. பதிவுத்துறை பொறுத்த வரை யாராலும் ஓன்று செய்ய முடியாது என்ற எண்ணத்தில் சதுரடி 10 ரூபாய் இருந்த இடங்களை எல்லாம் 50 மடங்கு 100 மடங்கு உயர்த்தி விட்டார்கள்.
இப்படி பட்ட சொத்திற்கும் அங்கு நிலவும் சந்தை மதிப்பிற்கும் சம்மந்தமில்லாமல் நிறைய MVG உருவானதால் மக்கள் கோபமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள். எப்பொழுதும் சட்டத்திற்கு விரோதமாக இருக்கும் நிர்வாக உத்தரவுகளை நீதி மன்றத்தில் உடைத்து விடலாம் சட்டத்திற்கு உட்பட்டு மக்கள் விரோதமாக செயல்படுத்தப்பட்ட நிர்வாக உத்தரவுகளை மக்கள் மன்றத்தில் உடைத்து விடலாம் அது போல 2016 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அன்று ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அம்மையார் அவர்கள் படுதோல்வி அடைந்தார். அந்த தோல்விக்கு இந்த சந்தை வழிகாட்டி மதிப்பு உயர்வும் காரணம் என்பதால் 9.6.2017 முதல் MVG யை 33% குறைத்தார்கள் அது தான் இன்று வரை பின்பற்றப்படுகிறது தற்பொழுது ஆட்சியில் இருக்கும் திரு. மு.க ஸ்டாலின் ஐயா ஆட்சியில் MVG யை நிர்ணயித்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. நிலத்தின் விலை ஏறி இருக்கிறது. ஆனால் MVG உயராமல் இருக்கிறது என்று நினைத்து MVG யை உயர்த்த எண்ணுகிறார்கள்.
அப்படி எண்ணுவதில் தவறில்லை MVG நிர்ணயிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் முத்திரை சட்டம் 47AA யின் கீழ் சட்டப்படி அதன் விதி முறைகளில் உள்ள 7 பிரிவுகளின் படி செயல்பட்டு புதியதாக MVG யை நிர்ணயிக்க வேண்டும் ஆனால் அதனை செயல்படுத்தாமல், வழக்கம் போல் பதிவுத்துறை அதிகாரிகள் சிரத்தை எடுக்காமல் மாநில மதிப்பீட்டுக் குழு MVG யை 33% மீண்டும் உயர்த்தியது. அதற்கு பதிவு துறை அதிகாரிகள், MVG யை புதியதாக நிர்ணயிக்காமல் அது 2012 யில் சட்டமுறை நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை 2017 இல் 33% குறைத்து இருந்தோம். அந்த 33% சதவீதத்தை திரும்ப பெறுகிறோம் என்று வாதத்தை வைத்து எந்த வித சிரத்தை இல்லாமல் MVG மதிப்பை 33% உயர்த்திவிட வேண்டும் என்று நினைத்து உயர்த்தி விட்டனர்.
நாளை தொடரும்....
இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
www.paranjothipandian.com
Comments
Post a Comment