சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 2

சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 2


....அல்லது பேனாவினால் ஒரு மதிப்பை எழுதி அதன் அருகில் பதிவுத்துறை துணைதலைவர் கையெழுத்து இருக்கும்! இப்படி பென்சிலில் எழுதிய குறிப்பையும் அல்லது DIG உத்தரவுடன் இருக்கும் குறிப்பையும் சார்பதிவாளர் பார்த்து வழிகாட்டி மதிப்பு என்னவென்று சொல்வார்கள்.இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் MVG பதிவேட்டில் “மதிப்பு “ சதுரடி 1000 என்று இருந்தால் அதன் பக்கத்தில் பேனாவில் பதிவுத்துறை தலைவர் உத்தரவின் பேரில் 3000 சதுரடி என்று எழுதி இருந்தாலே 3000 மதிப்பைதான் சார்பதிவாளர் குறித்து கொடுக்க வேண்டும். அதேபோல் எந்தவித உத்தரவு இல்லாமல் பென்சிலில் 2000 சதுரடி என்று எழுதியிருந்தால் அதனை குறிக்காமல் உண்மையாக அச்சடிக்கப்பட்ட மதிப்பு ரூபாய் 1000த்தைத்தான் சார்பதிவாளர் குறித்து கொடுக்க வேண்டும்!என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்! தமிழகத்தில் சாமானியன் யாராவது பத்திரம் பதியபோனால் அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய் மதிப்பை சார்பதிவாளர் சொல்லாமல் பக்கத்தில் பென்சிலில் எழுதியிருக்கும் மதிப்பைத்தான் சொல்வார். ஏன்? சார் பென்சிலில் இருப்பதை சொல்கிறீர்கள், அச்சடிக்கப்பட்ட மதிப்புத்தானே சட்ட அந்தஸ்து உள்ளது என்று சொன்னால் அதற்கு சார்பதிவாளர் இந்த மதிப்பு பக்கத்து சர்வே எண்ணில் ஆவண பதிவுகள் மூலம் உயர் மதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை பென்சிலில் குறித்து வைத்துள்ளோம், அதனைதான் நாங்கள் சொல்கிறோம்! நீங்களும் அந்த மதிப்பை பதிய வேண்டும் என்று சொல்வார்கள். உண்மையில் அச்சடிக்கப்பட்ட மதிப்பைத்தான் பதிய வேண்டும். அல்லது அதில் ஏதாவது திருத்தம் என்றால் பதிவுத்துறை துணை தலைவர் உத்தரவிட்டு கையெழுத்து போட்டு இருக்க வேண்டும், இதை தவிர்த்து பென்சிலில் போட்ட உயர் மதிப்புகளை வைத்து பதிய கூடாது. ஆனால் விவரம் தெரியாத சாமானியர்கள் பலர் இந்த பென்சில் மதிப்பிற்கு பத்திரம் பதிந்துவிடுவார்கள். இதனால் பதிவுத்துறையின் வசூல் இலக்கு சீக்கிரம் நிறைவேறும். சரி இதெல்லாம் சாமானியன் பத்திரம் பதியும் பொழுது செய்வார்கள் இதுவே சாமானியன் நிலம் அரசின் பிறதுறைகளில் ஆர்ஜிதம் செய்யப்பட்டால் அதற்கான நஷ்ட ஈடு நிர்ணயிக்க அரசின் பிற துறைகள் வழிகாட்டி மதிப்பு என்னவென்று சார்பதிவாளரை கேட்டால் சார்பதிவாளர் அச்சடிக்கப்பட்ட மதிப்பை விட பக்கத்தில் பென்சிலிலோ அல்லது DIG உத்தரவுடன் உள்ள உயர் மதிப்பைதானே அளிக்க வேண்டும். 

தொடரும்..



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

9841665836

www.paranjothipandian.com

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…